Friday 2 December 2016

டிசம்பர்-2 போபால் விஷவாயு நினைவு தினம்...

அருமைத் தோழர்களே ! 1984 ஆம் ஆண்டு டிசம்பர்-2 அன்று நடைபெற்ற கோரமான போபால் விஷவாயு நினைவு தினம்....
போபால் விஷவாயுக் கசிவுவழக்கின் முதல்குற்றவாளி வாரன்ஆண்டர்சன்இறந்து விட்டார்.ஆனால்அவர்இறந்த செய்தி ஒருமாதம் கழித்து ரகசியமாக வெளியாகிஉள்ள விதமேபோபால் விஷ வாயு விபத்தில் அவருக்குஉள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோலஇருக்கிறது.அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம்தேதி அவர் இறந்திருக்கிறார்போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர்அதன்பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
மோசமானவிபத்து1984- மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உரநிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதுஉலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில்ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானதுஅரசுப் பதிவுகளின்படிஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர்இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்குஇன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லைவாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர்.
தப்பிய ஆண்டர்சன்
அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும்தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன்
ஆண்டர்சன்1984 டிசம்பர் 6-ம் தேதி அவர்கைதுசெய்யப்பட்டார்உடனடியாக ஜாமீனில்வெளிவந்தஆண்டர்சன்அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்மத்திய அரசுஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன்அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லைமத்தியஅரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
தீராத சீர்கேடு
விபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோகெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதுஆனால்இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்தஇடத்தில்உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை
இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும்நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனவாரன் ஆண்டர்சன் ஒருகார்பரேட் கிரிமினல்வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்துகடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனதுஅவரைப்போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல்செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர்சதிநாத் சாரங்கி.

No comments: