Thursday 15 December 2016

பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழிக்கும் சதி - பி.அபிமன்யு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள்டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின்மொபைல் டவர்களைப் பராமரிக்க ஒரு துணை நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்குஒரு குறிப்புஅனுப்பியுள்ளது. மத்திய அமைச்சரவை இதற்குஒப்புதல் அளித்தால், பிஎஸ்என்எல்நிறுவனத்தின் 65000 மொபைல் டவர்களும் புதியதுணை டவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
Image result for P. ABHIMANYU.GS. BSNLEUஇந்த முயற்சியை பிஎஸ்என்எல் நிறுவனத்தில்உள்ளஅனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கப் பட்ட காலம் முதலிலிருந்தே,தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த மத்திய அரசாங்கங்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கவும், தனியார்மயமாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனால், பிஎஸ்என்எல்நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களது ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம், இந்த நடவடிக்கைகளை முடக்கி வைத்தன.எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் துண்டாடுவதற்கு சாதகமாக முன்வைக்கப் படும் அம்சங்கள் பின்வருமாறு :தொலைத்தொடர்பு துறையில், டவர் மூலமான வர்த்தகம், மிக லாபகரமான வர்த்தகமாகும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது டவர்கள்மூலம் முழுமையாக பலன் பெறவும், அதிக பட்ச லாபமீட்டவும் முடியவில்லை.ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப் பட்டால், நிர்வாகம் டவர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும், டவர்களை மிகத் திறமையாக நிர்வகிக்கவும், அதிக பட்ச லாபம் ஈட்டவும் முடியும்.தனது அதிகமான தேய்மான செலவினால், பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2015-16- ஆம் ஆண்டில், தேய்மான தொகைரூ.8816 கோடியாகும். துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், இந்தத் தேய்மானத்தின் பெரும் பகுதி துணை நிறுவனத்தின் கணக்குக்குள் சென்று விடும்என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு லாபம் ஈட்டும்நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், டவர் வர்த்தகம் கூடுதல் லாபமீட்டுவதாக அமையும் என்று கூறுவது, திசை திருப்புகிற, ஏமாற்றுவாதம் ஆகும். மத்திய அரசின் ஆலோசனையின்படி,பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டுதான் துணை டவர் நிறுவனம் இயங்கவுள்ளது. துணைடவர் நிறுவனத்தில், அதிக லாபமீட்டக் கூடிய டவர்வர்த்தகத்தை அவர்கள் செய்ய முடியும் என்றால், அதை துணை டவர் நிறுவனம் இல்லாமலேயே அவர்களால் செய்ய முடியும்.
எனவே, துணை டவர்நிறுவனம் அமைப்பதற்கான எந்த அடிப்படையும் இல்லை என்பதே உண்மை.மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனவிரோத – தனியார் ஆதரவு கொள்கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஏறத்தாழ 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வலைக் கட்டமைப்பைவிரிவாக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கூற்றாகும். அதுமுற்றிலும் உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மொபைல் கருவிகள் வாங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் விடுத்த டெண்டர்கள், ஒன்றன் பின் ஒன்றாக அன்றைய அரசால் ரத்து செய்யப்பட்டன.
இந்தக்காரணத்தால்தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி தடைப்பட்டு நஷ்டத்தில் சென்றது. ’தேய்மானம்’ என்ற அதிக கணக்குதான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்துக்குக் காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே, நிர்வாகமும் ஊழியர்களும் எடுத்து வரும் கடுமையான முயற்சிகளால், பிஎஸ்என்எல் நிறுவனம் மிக நல்ல முன்னேற்றங்களை அடையத் துவங்கியுள்ளது. 2016- செப்டம்பருக்கு முன்பான ஆறு மாதங்களில், ஐந்து மாதங்கள் நாட்டின் அதிகபட்ச மொபைல் இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம்தான் வழங்கியுள்ளது. ஏற்கனவே, 3854 கோடி ரூபாய், செயலாக்க லாபத்தை நிறுவனம் ஈட்டிவிட்டது.
துணை டவர் நிறுவனம் அமைக்கப்படாமலேயே, பிஎஸ்என்எல் மீண்டும் லாபம் ஈட்டக் கூடிய நிறுவனமாக மாறி விடும் என்பது உறுதி. தொலைத் தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் ஒரே பொதுத் துறைநிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. விஎஸ்என்எல்நிறுவனம் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தின் பங்குகள், 46.5சதவீதம் விற்கப்பட்டு விட்டன. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பதற்கு மத்திய அரசு மூர்க்கத்தனமாக விரும்புகிறது. துணை டவர் நிறுவனம் அமைப்பது என்பது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான புறவாசல் வழியே தவிர வேறில்லை.
துணை டவர் நிறுவனம் 100 சதவீதம் அரசு நிறுவனமாக இருக்கும் என்றும், அது முழுமையாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்தாகவே இருக்கும் என்றும் மத்திய அரசு கூறும் இனிப்பான வார்த்தைகளை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதுதான் இன்றைய மத்திய அரசின் கொள்கையாகும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான வரை படம் தயாரிப்பதுதான் நிதி ஆயோக்அமைப்பின் முழு நேரப் பணி என்பது அனைவரும்அறிந்த பகிரங்க ரகசியமாகும். துணை டவர் நிறுவனம் அமைக்க அனுமதிக்கப்பட்டால், கேந்திர பங்கு விற்பனை விரைவில் செய்யப்பட்டு, ஒரு தனியார்பங்குதாரர் உள்ளே திணிக்கப்படுவார்.
அதன் பின்,துணை டவர் நிறுவனம் முற்றிலும் தனியார் மயமாக்கப்படுவதற்கு நாட்கள் அதிகம் ஆகாது. இன்றையசூழ்நிலையில், மொபைல் டவர்கள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயிர் ஆதாரமாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டவர்கள் அதனிடமிருந்து பறிக்கப்பட்டால், நிறுவனம் இயற்கையாகவே மரணமடைந்து விடும். எனவே, பிஎஸ்என்எல்நிறுவனத்திடமிருந்து அதன் மதிப்பு மிக்க மொபைல் டவர்களைப் பறித்துக் கொள்ள மத்திய அரசாங்கத்தை அனுமதிப்பதில்லை என பிஎஸ்என்எல்நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்து, மத்திய அரசாங்கத்தின் கடுமையான தாக்குதல்களிலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாக்க, ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. கேபிள்களைத் திறந்து விடுவது, பங்கு விற்பனை, விருப்ப ஓய்வு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளை ஊழியர்கள் வெற்றிகரமாகத் தடுத்துநிறுத்தி உள்ளனர். இப்போதும், துணை டவர்நிறுவனம் அமைத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் துண்டாடி ஒழிக்க முற்படும் சதித் திட்டத்தை ஊழியர்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்.
(கட்டுரையாளர்: பிஎஸ்என்எல்யு -பொதுச் செயலாளர்)...நன்றி தீக்கதிர் 

No comments: