Saturday, 3 December 2016
BSNL- ஐ தகர்த்திட மோடி அரசு முடிவு : கண்டித்து BSNLஊழியர்கள் வேலைநிறுத்தம்.

மத்திய அரசு, தற்சமயம் BSNL
நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் மொபைல்
டவர்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள
இழிமுயற்சிகளை கண்டிக்கும் விதத்தில், BSNL நிறுவனத்தின்கீழ் இயங்கிடும் அலுவலர்களும், ஊழியர்களும் வரும் 2016 டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலை
நிறுத்தம் மேற்கொள்ள விருக்கிறார்கள்.இது தொடர்பாக BSNLஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. அபிமன்யு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“2016 டிசம்பர் 15 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள BSNL நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள். அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தகர்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் BSNL நிறுவனத்தின் 65 ஆயிரம் மொபைல் டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு குறிப்பினை அனுப்பி இருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படும் அனைத்து ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் எதிர்த்துள்ளன.
BSNL நிறுவனம்தான் பொதுத்துறை நிறுவனத்தில் முழுக்க முழுக்க 100 சதவீதம் அரசு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. VSNL ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 46.5 சதவீதப் பங்குகள் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்போது அதேபோன்று BSNL நிறுவனத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. மொபைல் டவர்களுக்கு என்று ஒரு துணை அமைப்பு ஏற்படுத்த இருப்பது, பின்னர் அதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சூழ்ச்சியே தவிர வேறல்ல.
இதுதொடர்பாக அரசாங்கத்தின் இனிப்பு கலந்த வார்த்தைகளைக் கேட்க ஊழியர்கள் தயாரில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எப்படி எப்படியெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்திடலாம் என்பதற்காக நிதி ஆயோக் ஒரு வரைவினை தயார்செய்து அரசாங்கத்திற்குத் தந்திருப்பது ஊரறிந்த ரகசியம். இன்றைய நிலையில், BSNLநிறுவனத்தைப் பொறுத்தவரை மொபைல் டவர்கள் அதன் உயிர்நாடியாகும். அதனை BSNL நிறுவனத்திடமிருந்து பறித்துவிட்டால், பின் BSNL இயற்கையாகவே மரணித்துவிடும். எனவே, அரசின் இந்நடவடிக்கையை BSNL நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் எதிர்த்திடத் தீர்மானித்திருக்கின்றன.
எனவேதான் அரசின் இந்த சூழ்ச்சியான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திட அனைத்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.”இவ்வாறு பி.அபிமன்யு அறிக்கையில் கூறியுள்ளார்.
Friday, 2 December 2016
டிசம்பர் -8, தோழர் K.G.போஸ் நினைவு தினம்...
நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்பிகின்றேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்து அவற்றுடன் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராட விரும்புகின்றேன். இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதன் இல்லை. என்னுடன் ஆயிரம் ஆயிரம் தோழர்கள் இருக்கின்றனர். அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள்...தோழர் K. G. போஸின் கடைசிக் கடிதத்திலிருந்து...
நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது மிக சாலச் சிறந்ததாகும்.நிறுவன பாதுகாப்பு மற்றும் ஊழியர் நலன் பாதுகாப்புகளை தொடர்ந்து KGB வழியில் முன்செல்வோம்...BSNL-யை பாதுகாப்போம்...BSNLEUவைவளர்ப்போம்...ஊழியர்நலன்பேணுவோம்...
நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது மிக சாலச் சிறந்ததாகும்.நிறுவன பாதுகாப்பு மற்றும் ஊழியர் நலன் பாதுகாப்புகளை தொடர்ந்து KGB வழியில் முன்செல்வோம்...BSNL-யை பாதுகாப்போம்...BSNLEUவைவளர்ப்போம்...ஊழியர்நலன்பேணுவோம்...டிசம்பர்-2 போபால் விஷவாயு நினைவு தினம்...
அருமைத் தோழர்களே ! 1984 ஆம் ஆண்டு டிசம்பர்-2 அன்று நடைபெற்ற கோரமான போபால் விஷவாயு நினைவு தினம்....
போபால் விஷவாயுக் கசிவுவழக்கின் முதல்குற்றவாளி வாரன்ஆண்டர்சன்இறந்து விட்டார்.ஆனால், அவர்இறந்த செய்தி ஒருமாதம் கழித்து ரகசியமாக வெளியாகிஉள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்குஉள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோலஇருக்கிறது.அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம்தேதி அவர் இறந்திருக்கிறார். போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர், அதன்பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
போபால் விஷவாயுக் கசிவுவழக்கின் முதல்குற்றவாளி வாரன்ஆண்டர்சன்இறந்து விட்டார்.ஆனால், அவர்இறந்த செய்தி ஒருமாதம் கழித்து ரகசியமாக வெளியாகிஉள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்குஉள்ள பெரும் பங்கைச் சுட்டிக்காட்டுவதுபோலஇருக்கிறது.அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணம் வெரோ கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம்தேதி அவர் இறந்திருக்கிறார். போபால் விபத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ஜாமீனில் அமெரிக்கா தப்பிச் சென்ற அவர், அதன்பிறகு கனவிலும் இந்தியாவை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
மோசமானவிபத்து1984- மத்தியப் பிரதேசத் தலைநகரம் போபாலில் டிசம்பர் 2-ம் தேதி இரவும் 3-ம் தேதி அதிகாலையும் அமெரிக்க உரநிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான தொழிற்சாலை விபத்துகளில்ஒன்றாகக் கருதப்படும் அந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான மீதைல் ஐசோசயனேட் வெளியானது. அரசுப் பதிவுகளின்படிஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போயினர், 5 லட்சம் பேர் காயமடைந்தனர். இந்தத் தொழிற்சாலை ஏற்படுத்திய இழப்புகளுக்கு, இன்றுவரை முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. வாழ்வை இழந்த ஆயிரக்கணக்கானோர் 30 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர்.
அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும்தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர்தான் வாரன்
ஆண்டர்சன். 1984 டிசம்பர் 6-ம் தேதி அவர்கைதுசெய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில்வெளிவந்தஆண்டர்சன், அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். மத்திய அரசுஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன், அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லை. மத்தியஅரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆண்டர்சன். 1984 டிசம்பர் 6-ம் தேதி அவர்கைதுசெய்யப்பட்டார். உடனடியாக ஜாமீனில்வெளிவந்தஆண்டர்சன், அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். மத்திய அரசுஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் தப்பிச் சென்ற ஆண்டர்சன், அதற்குப் பிறகு இந்திய மண்ணை மிதிக்கவில்லை. மத்தியஅரசும் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
தீராத சீர்கேடு
விபத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு நிறுவனத்தை டோகெமிகல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால், இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்தஇடத்தில்உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை
“இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும், நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வாரன் ஆண்டர்சன் ஒருகார்பரேட் கிரிமினல். வாழ்க்கை முழுவதும் ஓடி ஒளிந்து, கடைசியில் தலைமறைவாகவே அவர் இறந்து போனது, அவரைப்போன்ற மற்ற கார்பரேட் கிரிமினல்களுக்குப் பாடமாக அமையும்” என்கிறார் போபால் தகவல், செயல்பாட்டுக் குழுவின் உறுப்பினர்சதிநாத் சாரங்கி.
Thursday, 1 December 2016
Wednesday, 30 November 2016
BSNL-லில் 2017க்கான விடுமுறை நாட்கள்அறிவிப்பு...
Tuesday, 29 November 2016
Monday, 28 November 2016
நவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17
வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது
26-11-16 சிஐடியு மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது...
மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது..
Subscribe to:
Posts (Atom)











