BSNLEU ????? ???????? ?????? ?????? ???????????

Welcome

Welcome

Dist. E.C. 2.2.17

Dist. E.C. 2.2.17

Thursday, 5 September 2013

எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோதா . . .

இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி - ஊழியர்விரோத பென்சன்மசோதா நிறைவேறியது
இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிய பென்சன் மசோதாவை மன்மோகன்சிங் அரசு புதனன்று மக்களவையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்திற்குப் பதிலாக ஊழியர்களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடுசெய்து சூறையாடவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று தொழிலாளர்களும் ஊழியர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த ஊழியர்விரோத மசோதா நிறைவேற்றப்பட் டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2005ம் ஆண்டிலிருந்தே இம்மசோ தாவை நிறைவேற்ற அரசு துடித்தது.
2005ம் ஆண்டில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மசோதா 2011ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட்டது.இந்தமசோதா ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு சட்டரீதியான அதிகாரங்களை அளிக்க வகை செய்கிறது. 2003ம் ஆண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இது இடைக்கால ஆணையம்தான் என்றும் பிறகு சட்டப்பூர்வ ஆணையம் அமைக்கப்படும் என்றும் அப்போதைய பாஜக அரசு கூறியது.
ஆனால் நிர்வாக உத்தரவு மூலம் 2004ம் ஆண்டு முதல் இந்தஆணையம் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்தமசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு சிலமுக்கிய திருத்தங்களை கொடுத்திருந்தது. இந்தசட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதன் மூலம் ஓய்வூதிய நிதிநிறு வனங்களிலும் அந்நிய மூலதனம் 49 சதவிதம் அளவுக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஓய்வூதிய நிதியில் முற்றாக அந்நியரை அனுமதிக்கவும் மன் மோகன்சிங் அரசு திட்ட மிட்டுள்ளது.
இம்மசோதாவை நிறை வேற்றுவதில் மன்மோகன்சிங் அரசு குறியாக இருந்த நிலையில், புதனன்று நாடாளுமன்றத்தில் நிலக்கரி பங்குகள் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் வெடித்தது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் இம்மசோதா அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிஉள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பங்குச்சந்தையில் ஓய்வூதிய நிதியை முதலீடு செய்வது மற்றும் அந்நியரை அனுமதிப்பதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அவையில் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர அவசரமாக இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர். விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய ப.சிதம்பரம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பெரும்பாலான திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறினார்.

Wednesday, 4 September 2013

புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டம் . . .

மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இம்மசோதா அன்றைய தினமே நிறைவேறக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.
அன்றைய தினம் வேறு பிரச்சனைக்குரிய அலுவல்கள் இல்லாததாலும் பாஜகவும் காங்கிரசும் இதில் ஒத்த கருத்துடன் இருப்பதாலும் அன்றே நிறைவேற்றும்மத்தியஅரசின் இம்  முயற்ச்சியை அனைத்து தொழிலாளர் சங்கமும்  எதிர்ப்பது.இம்மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போராடிப் பெற்ற ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்டும் இந்த மசோதா நிறைவேறினால் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், 2ம் தேதியோ மறுநாளோ 2 மணி நேர வெளிநடப்பு செய்திட திட்டமிட்டுள்ளனர்.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பும் 2ம் தேதியே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட சிஐடியு தமிழ் மாநிலக் குழு திட்டமிட்டுள்ளது.
இதனை ஒட்டி மதுரை நகரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நடை பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நமது BSNLEU + TNTCWU சார்பாக நமது மாநில அமைப்புசெயலர் தோழர் .சி .செல்வின் சத்தியராஜ் ,TNTCWU  மாவட்டசெயலர் தோழர் .N .சோணைமுத்து உட்பட  43 தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .இந்த ஆர்ப்பாட்டத்தை CITU தலைவர்களில் ஒருவரான தோழர் .பா .விக்கரமன் துவக்கிவைத்து உரையாற்றினர் .CITU மாவட்ட செயலர் தோழர் .V பிச்சை நிறைவு உரையாற்றினர் .நமது மாவட்ட செயலர் தோழர் .எஸ்.சூரியன் கோரிக்கையை வலியுறித்தி பேசினார் .அனைத்து சங்கங்களிளிருந்தும் பல நூறு  தோழர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சமாகும். 

கார்ட்டுன் கார்னர் . . .


இந்தியாவில் சமூக மாற் றத்திற்கு வித்திட்டவர் மறைந்த தலைவர் ஜோதி பாசு
இந்திய தொழிலாளர் வர்கத்தின் மகத்தான தலைவராக இருந்து மறைந்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு துவக்கவிழா இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. சிஐடியு சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில்அ. சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார்.
எங்கெல்லாம் சாதாரண மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வரலாறு படைத்துள்ளனர். அந்த வரிசையில்தான் மக்கள் நலனை காப்பதில் வரலாறு படைத்தவர் ஜோதிபாசு. மேற்கு வங்க மாநிலத்தில் 23 ஆண்டு காலமாக முதலமைச்சராக இருந்த போதிலும், ஊழல் கரைப்படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் அவர். படிப்புக் காலம், இளைமை காலம் போக தனது 80 ஆண்டு கால அரசியலில் அப்பழுக்கற்றவராக திகழ்ந்தவர் ஜோதிபாசு.நிலவிநியோகம் இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது என உலகின் மூலைமுடுக்குகளிலும், முழக்கமிட்டு வருகிறோம். அதை இந்தியாவில் அமல் படுத்திக் காட்டி சாதனை படைத்தவர் தோழர் .ஜோதி பாசு.

ஆனால், தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது நிலச் சீர்திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதை, உச்சவரம்பா அல்லது மிச்சவரம்பா என்று அண்ணாவும், கலைஞரும் கிண்டல் செய்தனர். பண்ணை தோட்டம் என பினாமிகள் பெயரில் எழுதிக்கொண்டனர். இதனால், தமிழ்நாட்டில் இன்னமும் நிலக் குவியல்கள் நீடிக்கி றது என்றார்.
---தீக்கதிர்