Friday, 2 January 2015

கோட்சே என்ற கொடியவன் - மறக்கக்கூடாத வரலாறு...

கடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று RSS தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சேஎன்ற ஒரு திரைப்படம் வெளியிட வுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாய கனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இன்னொருபக்கம் இதுவரை தடை செய்யப் பட்டிருந்த கோட்சே எழுதிய `நான் ஏன் காந்தியைக் கொன்றேன்என்ற புத்தகம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டு தில்லியில் புத்தக கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் கோட்சேவுக்கு சிலை வைக்கப்பட வேண்டும் அதற்காக மத்திய அரசிடம் நிலம் கேட்கப் பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் கோட்சேவுக்கு சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளையொட்டி `RSS - ஒரு அறிமுகம்என்ற பெயரில் நூலும் வெளியிடப் பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் மறைமுகமாக காந்தியின் கொலையை நியாயப்படுத்தவும் செய் துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் சாதி- மதங்கள்- வர்க்கங்கள் கடந்து திரட்டிய ஒரு தன்னலமற்ற மாமனிதராம் காந்தியை, குக்கிராமம் தொடங்கி நாடு முழுவதும் தேசப்பிதா என்று கொண்டாடப்படும் காந்தியை சுட்டுப் படுகொலை செய்த மதவெறி கோட்சேவை இப்போது இப்படியாக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்த முயற்சி மேற்கொண்டுள்ளது காவிக் கூட்டம்.
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வல்லபாய் படேல் MS.கோல்வாக்கருக்கும் SP முகர்ஜிக்கும் அனுப்பிய கடிதங்களில், “RSS தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் முழுமையாக மதவெறியை தூண்டும் நச்சுக்களாகவே இருந்தன. இதனால் ஒரு நச்சுத்தனமான சூழல் உருவாக்கப்பட்டு, அதன் இறுதி விளைவாக ஒரு கொடுந்துயரம்(காந்தியின் படுகொலை) நடந்துள்ளது. RSS உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டனர். காந்தியின் மரணச் செய்தியை கேட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்என்று குறிப்பிட்டிருந்தார். மதவெறியர்களின் அந்த மகிழ்ச்சி இன்றும் தொடர்கிறது.கோட்சே ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் அல்ல. RSSக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருவதும் முழுப் பொய் ஆகும். RSS அமைப்பே கூறுவது போல, அவர் ஒரு மதவாத அறிவு ஜீவி ஆவார். திட்டமிட்டே கொலை செய்து, ஏன் கொன்றேன் என்று நியாயப் படுத்தும் வாக்குமூலத்தையும் அளித்தவர்தான் கோட்சே. நாதுராம் விநாயக் கோட்சே என்ற அந்த நபர், மஹாராஷ்டிராவில் பூனாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இதுவரை இந்திய நாட்டின் மிக உயர் அதிகாரபீடத்தில் இருந்து வரும் சித்பவன பிராமண வகுப்பில் பிறந்தவர். BJP மற்றும் அதன் தாய் அமைப்பான RSS அமைப்பின் தலைமைப்பொறுப்பை வகித்துவருபவர்களும் இவர்களே.
கோட்சேயின் குடும்பத்தில் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், அது பிறக்காத சூழலில், கோட்சேயை பெண்குழந்தையாக பாவித்து மூக்குத்தி மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகளை அணிவித்து வளர்க்கப்பட்டார். இதனால் கோட்சேயின் பாலின அடையாளம் குழப்பமாகி அது அவருக்கு சிக்கலான இளம் பருவமாக இருந்தது. அரசியலிலும் சமூகத்திலும் ஆதிக்கத்திலேயே இருந்து வரும் சித்பவன சாதிக்குடும்பம், திடீரென வறுமையில் வீழ்ந்தது. அதிகாரமில்லாததால் ஏற்பட்ட விரக்தியும், பாலின அடையாளச் சிக்கலும் சேர்ந்து கொண்டு அவனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்கும் பொருட்டு அவனை ஒரு தீவிரவாதியாக மாற்றியிருக்கலாம் என்று அரசியல் உளவியலாளர் ஆசிஸ் நந்தி, `உளவியலின் விளிம்பு’ (எட்ஜ் ஆப் சைக்காலஜி) என்ற நூலில் குறிப்பிடுகிறார். இன்னொருபக்கம் கோட்சே மகாத்மா காந்தியின் அரசியலையும் அவரது அணி திரட்டலையும் எப்போதுமே மிகக் கடுமையாகவும் விமர்சித்து வந்தார்.
மிகவும் குறுகிய வக்கிரத்துடன் காந்தியின் அரசியலைப் புரிந்து கொண்டு தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். “காந்தி இந்து, முஸ்லிம் மக்களை ஒற்றுமைப் படுத்துவது என்ற பெயரில் வரலாற்றுரீதியாக புனிதமான இந்து பூமிக்கு கடுமையான களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டார். இதன் மூலம் நீசர்களாகிய முஸ்லிம்கள் தனி நாடாக பாகிஸ்தான் கேட்கும் அளவுக்கு ஊக்கமளித்து விட்டார். இதை விட இந்து மரபை கொச்சைப்படுத்தும்விதமாக `அகிம்சைஎன்ற பெயரில் இந்துக்களின் ஆண்மையை நீக்கி மலடாக்கி விட்டார். இந்து மக்களுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்து விட்டார்என்று கோட்சேயின் நூலில் மதவெறி வக்கிரமும் ஆணாதிக்கத்தனமும் வழிந்தோடுகிறது.கோட்சே RSSசை விட்டு திட்டமிட்டு வெளியேறி, இந்து மகாசபையில் சேருகின்றார். அங்கு காந்தியை கொல்லும் திட்டம் உருவாக்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அத்வானி உள்ளிட்ட BJP தலைவர்கள் RSSக்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி அவர்களின் வரலாற்றுக் குற்றங்களிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.ஆனால், கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, தெளிவாக கூறுகிறார்; கோட்சே RSSசை விட்டு வெளியேறியது, காந்தியின் கொலைக்குப் பின்னர் RSS தலைவர்கள் இந்த வழக்கினால் போலீசாரால் துன்புறுத்தப்படுவார்கள்; அதைத் தவிர்க்கவே RSSசை விட்டு வெளியேறினார். RSSக்கும் அந்த உள்ளார்ந்த புரிதல் இருந்தது.” கோட்சேவுக்கு சிலை வைக்கிற, அவரை ஆராதிக்கிற வக்கிர மதவெறிகள் அடையும் மகிழ்ச்சியின் பின்னணி இதுதான்.---தீக்கதிர் 

Thursday, 1 January 2015

03.01.2015 நமது BSNLEU -MA,மாவட்ட செயற்குழுவிற்கு Spl.C.L...

அருமைத் தோழர்களே ! 03.01.2015  அன்று நடைபெற உள்ள நமது BSNLEU மதுரை ,மாவட்ட செயற்குழுவிற்குBSNL மாவட்ட நிர்வாகம் Spl.C.Lஅளித்துள்ள கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. 

PAY SLIP- சம்பள பட்டியல் பெறுவதற்கான புதிய போர்ட்டல்...

ERP-ல் சம்பள பட்டியல் (PAY SLIP) விபரம் அலுவலர்கள் அணைவரும் தெரிந்து கொள்வதற்கு சென்னை CGM(O)/ மாநிலநிர்வாகம் வழிகாட்டுதலையும்,  PAY SLIP பெறுவதற் கான புதிய  SAP Netweaverportal போர்ட்டல் ஒன்றையும் வெளியிட்டுள்ளதுERP-ல்PAYSLIP- பார்பதற்க்கு /print  எடுப்பதற்கு Madurai SSA SITE-ல் உள்ள "ERP ESS Portal"லை கிளிக் செய்தால்SAP Netweaverportalஸ்கிரின் மிளிரும், அதில் User ID ஆக தங்களது HRMS.NO முதல் எண்ணை தவிர்த்து பதிவு செய்யவும், பின்பு PASS WORD ஆக bsnltn@123 யை பதிவு செய்ய PASS WORD மாற்றுவதற்கு ஸ்கிரின்ல்  தங்களது புதிய சொந்த PASS WORD பதிவு செய்யவும். அப்போது கிடைக்கும்  Benefits and Payments கிளிக் செய்தால் தங்களது சம்பள பட்டியல் கிடைக்கும்.(குறிப்பு: இந்த மாதத்திற்கான சம்பள பட்டியலில்"ப்ரபோசன் டாக்ஸ்"பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடப்படாததால், சம்பள மொத்தத்தில் வித்தியாசம் வருகிறது. அதேபோன்று மற்றொரு விஷயம் அனைவரும் கவனிக்க வேண்டியது ERP-ல்PAYSLIP பார்பதற்கு பிரதிமாதம் 20-ம தேதி வரைதான் முடியும்)   --- இங்கே கிளிக் செய்யவும். 

குறைந்த பட்ச கூலி குறித்து மத்திய அரசு ஆலோசனை . . .

--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், D/S-BSNLEU.

புத்தாண்டே வருக! -கவிஞர் ந.நன்மாறன். . .

புத்தாண்டே உன்னைவருக, வருக என வரவேற்கின்றேன்!
மனதார வரவேற்க முடியாவிட்டாலும்
மரபுக்காக.தேசப்பிதாவின் தேகத்தைவீழ்த்தியவன்
 பிதாவிற்குரியநாட்டிலேயே போற்றப்படும்
 விந்தைவேறெங்கும் கண்டதுண்டா

பொதுமக்கள் பணம்போட்டுஉருவான
பொதுத்துறைஅயல்நாட்டு நிறுவனத்துக்கு
தனியாரின் சுயநலனுக்கு!பெயர் மாற்றம்
இல்லாத தனியார்துறை
இதுதான் மோடிவித்தை என்பதோ

நரபலி கண்டோம்
இது எந்த பலி
இல்ல மதம் திரும்புவோம்என்கிறார்கள்
ஆதிமனிதனுக்கு ஏது மதம்
எங்கிருந்தது இல்லம்

இல்லம் திரும்பச் சொல்லுவோர்
உள்ளம் திருந்த மாட்டார்களா
உடன்கட்டை ஏற்றம்
மீண்டும் வரபெண்களை

தயார் செய்யவிளக்கு பூஜை
அவர்களிடமே விளக்கு
ஆனாலும் உன்னைவரவேற்கிறேன்
புத்தாண்டே....நாளை மாறும்
 என்றநம்பிக்கையோடு!...

ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பஸ் வேலைநிறுத்தம் வாபஸ்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க அரசு ஒப்புதல், 
ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பஸ் வேலைநிறுத்தம் வாபஸ்...
அரசு போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் .சவுந்தரராசன், மு.சண்முகம் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள்15 மாதகாலமாக பேசப் படாமல் இருக்கும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சிஐடியு, தொமுச உள்ளிட்ட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட் டத்தின் பலனாக ஊதிய ஒப்பந்தம் நடத்த குழு அமைக்கப்படும் என அமைச்சர் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் வேலைநிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஊதியஉயர்வு கோரிக்கையின் மீது பேச்சு வார்த்தை கடந்த 1.9.2013 முதல் நடத்தாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில் டிச. 29 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கங்கள் அறிவித்தன.இதற்காக கடந்த சில மாதங் களாக தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதன் எதிரொலியாக, அரசும் போக்கு வரத்து நிர்வாகமும் மோசமானஅணுகுமுறைகளை கையாண்டது.தொழிலாளர்களின் ஒற்று மையை சீர்குலைக்கவும் போராட்டத்தை ஒடுக்கவும் காவல் துறையின் உதவியோடு அரசும் போக்குவரத்து நிர்வாகமும் கைது நடவடிக்கையை துவக்கியது.இதனால் ஆவேசமடைந்த தொழி லாளர்கள் வேறுவழியின்றி ஒரு நாள் முன்கூட்டியே டிசம் பர் 28ம் தேதியே வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. இதனையடுத்து, ஆளுங் கட்சியை சேர்ந்த ரவுடிகள் அனு பவம் இல்லாத ஓட்டுநர்கள் கொண்டு வாகனங்களை இயக்க மாநில அரசும் போக்குவரத்து நிர்வாகமும் முயற்சிகளை மேற் கொண்டது.ஆனாலும் பலன் அளிக்கவில்லை. இரண்டாவது நாளில் ஆளும் கட்சியை சேர்ந்த சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர். இதற்கிடையில், முதலமைச்சர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தொமுச நிர்வாகிகள் கடிதம் கொடுத்தனர். பின்னர், அரசு தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது.புதனன்று காலை 10.35 க்கு தலைமை செயலாகத்திற்கு வந்த தொழிற் சங்கத் தலைவர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் .சவுந்தரராசன் எம்எல்ஏ, நிர்வாகிகள் ஆறுமுகநயினார், எம்.சந்திரன்(சிஐடியு), மு.சண் முகம், நடராஜன் (தொமுச), சுப்பிரமணிபிள்ளை (எச்எம்எஸ்), லட்சு மணன்(ஏஐடியுசி), விஷ்ணு பிரசாத்(ஐஎன்டியுசி), சவுந்திர பாண்டியன்(டிஎம்பிஎஸ்பி), மீனாட்சிசுந்தரம்(பிஎம்எஸ்), அர்ஜூணன்(ஏஏஎல்எல்எப்), சின்னசாமி எம்எல்ஏ, தாடிமாராஜ் (ஏடிபி), பத்மநாபன்(டிடிஎஸ்எப்), முத்துகுமார் (பிடிஎஸ்) ஆகியோர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.பின்னர் தலைமை செயலக வளாகத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது . சவுந்தரராசன் கூறுகையில், 11 தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளில் பிரதானமானது ஊதியஉயர்வு ஒப்பந்தம் குறித்துஅனைத்து தொழிற்சங்கங் களையும் அழைத்து பேச வேண்டும் என்பதாகும். அரசு தரப் பில் அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேச ஆட் சேபனை இல்லை என தொமுச கடிதம் ககொடுத்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஒப்புக் கொண்ட தொமுச கடிதம் கொடுத்தது. இதன் அடிப்படையில் அமைச்சரை சந்தித் தோம். இதில் உடன்பாடு ஏற்பட் டது. எனவே, 11 சங்கமும் கூட்டாக வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முத்தரப்பு குழு அமைக்கப்படும் என அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்னும் இரண்டு நாட்களில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்குழு என்று ஒரு குழு அமைக்கப்படும். அரசு அமைக்கும் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அரசே முடிவு செய்யும். எங்கள் தரப்பில் தொமுச தலைவர் சண்முகம் உட்பட 11 சங்கங்களின் தலைவர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.வேலை நிறுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதன்பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார்.தொமுச தலைவர் சண்முகம் கூறுகையில், அமைச்சர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடுஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகள் விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார் என்றார். தோழர்களே "வஞ்சனைக்கும் அஞ்சிடோம், வெஞ்சிறைக்கும் அஞ்சிடோம்,நெஞ்சினைபிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்" என அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டபோதும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகளை உரித்தாக்குகிறது.

2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2.2 சத IDAஉயர்ந்துள்ளது...

IDA increase with effect from January 2015 : The CPI (IW) for all the 3 months from September to November 2014 remained static at 253. The IDA increase with effect from 1.1.2015 will be 2.2%, i.e., a total of 100.3%.
2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2.2 சத IDAஉயர்ந்துள்ளது...