Thursday, 2 January 2014

லஞ்சம் கைமாறியதாக- உடன்பாடு ரத்து .

ரூ.3600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் உடன்பாடு ரத்து 
ஊழல் வெளியானதால் நடவடிக்கை

இத்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்ட்வெஸ்ட்லேண்ட் நிறு வனத்துடன் செய்து கொண்ட ரூ.3,600 கோடி மதிப் புள்ள ஹெலிகாப்டர் இறக்குமதி உடன்பாட்டை இந்திய அரசு புதனன்று ரத்து செய்துள்ளது.இந்தஉடன்பாட்டை இறுதி செய்வதற்காக ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரையடுத்து இந்த உடன்பாடு ரத்து செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் .கே.அந்தோணி பிரதமர் மன்மோகன் சிங்கை புதனன்று சந்தித்துப்பேசினார். அதன்பிறகு உடன்பாட்டை ரத்து செய்வது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இத்தாலியைச்சேர்ந்த ஆங்கிலோ-இத்தாலியன் நிறுவனமான அகஸ்ட்வெஸ்ட் லேண்ட்நிறுவனத்திடமிருந்து விவிஐபி பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன் மதிப்புரூ.3600 கோடியாகும். இந்த உடன்பாட்டை இறுதி செய்ய இந்தியாவைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பிரமுகர்களுக்கு ரூ.360 கோடி லஞ்சம்கொடுக்கப்பட்ட தாக தகவல்வெளியானது. இதனடிப்படையில் இந்நிறுவனத்தின் மீது இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னரே இந்தியாவிலும் இந்தப் பிரச்சனை பெரிதாக எழுந்தது.  இந்த ஊழல் குறித்து மத்தியபுலனாய்வுத்துறை விசார ணைக்கு உத்தரவிடப்பட்டதுமுன்னாள் விமானப்படைத் தளபதியான எஸ்.பி.தியாகிக்கு இந்த ஊழலில் முக்கிய பங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளார். 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் மூன்று ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவினால் வாங்கப்பட்டுவிட்டன.மீதமுள்ள ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான உடன்பாடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கிலோ-இத்தாலிய நிறுவனத்துடன் சமரசத்தீர்வு முயற்சியில் இந்திய அரசு ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

முதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். . .

கார்ல் மார்க்ஸின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?
கார்ல் மார்க்ஸ் (1818-83) ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணராக அறியப்பட்டாலும், அவரின் சிந்தனைகள், தத்துவம், பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, இலக்கியம் என பலதுறைகளில் இருந்தன. இன்றும் இவரின் சிந்தனைகள் இத்துறைகளில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ளவர்களும் ஊன்றி படித்து தெரிந்துகொள்ள முயல்வது இவர் சிந்தனையின் சிறப்பு. படித்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்திலாவது மார்க்ஸின் சிந்தனையைத் தொடாமல் இருந்திருக்க முடியாது.வரலாற்று மாற்றம் என்பதே சமுதாய குழுக்களிடையே உள்ள மோதல்களில் தான் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர். வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தின் ஒரு குழுவினர் உற்பத்தி சாதனைகளை சொந்தம் கொண்டாடுவதால் அக்குழுவினர் சமுதாயம் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். மற்றொரு குழுவினர் தங்கள் நலனுக்காக ஆதிக்கக் குழுவினரோடு மோதலைக் கடைப்பிடிப்பதால், பழைய ஆதிக்க குழுவிற்குப்பதில் புதிய ஆதிக்க குழுக்கள் உருவாகும்.நில பிரபுத்துவ முறையில், நிலத்தை கையகப்படுத்திய நிலப்பிரபுக்கள் ஆதிக்க சக்தியாகவும், அதன் வழியில், முதலாளித்துவ முறையில் தொழில் முதலீடுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முதலாளிகள் ஆதிக்க சக்தியாகவும் இருந்தனர்.முதலாளித்துவ முறையில், உழைப்பாளர்களுக்கு குறைந்த கூலியைக்கொடுத்து, சுரண்டலைக் கையாண்டு அதிக லாபம் பார்க்கக் கூடிய வழிமுறையை முதலாளிகள் கடைபிடித்ததாக கார்ல் மார்க்ஸ் குற்றம் சாட்டினார். இந்த சுரண்டல் முறை தொடரும் போது சொத்துகள்கொண்ட முதலாளிகளுக்கும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, பின்னர் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தொழிலார்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படக்கூடிய சமுதாய மாற்றம் நிகழும் என்று மார்க்ஸ் வாதிட்டார். சோஷலிச சமுதாயத்தில் எல்லா உற்பத்தி சாதனங்களும் அரசுக்கு சொந்தமானதாகவும், பின்னர் எல்லா சொத்துகளும் மக்களால் கூட்டாக சொந்தம் கொண்டாடக்கூடிய நிலையான கம்யூனிச சமுதாயம் உருவாகும் என்று மார்க்ஸ் கூறினார். சோஷலிச சமுதாயத்தில் அரசு முதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். கம்யூனிச சமுதாயத்தில் எல்லாருக்கும் தேவையான அளவில் பொருட்களும், பணிகளும் வழங்கப்படும். இதில் அரசு என்ற அமைப்பு மறைந்து போகும்.எங்கெல்லாம் ஏற்றதாழ்வுகள் நிலவுகிறதோ அங்கெல்லாம் மார்க்ஸ் இருப்பது உறுதி. எனவே மார்க்ஸ் என்றும் நம்முடைய சிந்தனைகளை வடிவமைப்பதில் மிக முக்கிய சக்தியாகவே இருப்பார்.
நன்றி....தீ  ஹிந்து 

இந்திய ஜனநாயகம்- மதச்சார்பின்மை பேரபாயமாக அமையும்

மோடி - ஒரு பிளவு சக்தி -- என்.ராம் கருத்து
கேள்வி : மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
பதில் : சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது.
அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான்விகாஸ் புருஷ்அல்லதுவளர்ச்சியின் நாயகன்படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது.
மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.
நன்றி : இந்து (ஜன. 1) ஏட்டில் மூத்த பத்திரிகையாளர்என்.ராம் பேட்டியிலிருந்து


தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை- அஞ்சலி

 தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் அவரது 133 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அவரது  நினைவு தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்திருமங்கலம் எம்எல்ஏ .முத்துராமலிங்கம் தியாகி விஸ்வநாததாஸ் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.    அவருடன் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி, திருமங்கலம் நகராட்சி ஆணையர்வாசுதேவன், அதிமுக நகரச் செயலர் விஜயன், நகர்மன்ற துணைத் தலைவர் சதீஷ்சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, 1 January 2014

சேலத்திற்கு- மதுரை BSNLEU தோழமை வாழ்த்துக்கள் . . .

நமது சேலம் BSNLEU  மாவட்ட சங்கம் புதிய bsnleusalem@blogspot.in என்ற புதிய வலைத் தளத்தை 31.12.2013 அன்று துவக்கி உள்ளது ,சேலம் மாவட்ட சங்கத்தின் பணி சிறக்க உளப்பூர்வமான தோழமை வாழ்த்துக்களை நமது    மதுரை BSNLEU மாவட்டசங்கம்  தெரிவித்துக் கொள்கிறது..     நடை பெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு தோழர். S.தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். சேலம் BSNLEU மாவட்ட செயலர்,தோழர்.E.கோபால், வந்திருந்த அனைவரையும் 
தோழர் P. கிரிஷ்ணமூர்த்தி  TEPU மாவட்ட செயலர்தோழர்  M. மாதுசாமி SEWABSNL, மாவட்ட தலைவர்.தோழர்.C. செட்டிமணி SEWABSNL மாநில உதவி தலைவர் தோழர்  C. பாஸ்கர் TNTCWU மாவட்ட செயலர் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார்.  பின்னர்  தோழர்.VA.N நம்பூதிரி   அகில இந்திய  தலைவர்  BSNLEU      அவர்கள்,         சேலம் மாவட்டசங்கத்தின்  புதிய இணைய  தளத்தை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்ஊழியர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு
விளக்கம்அளித்தார்சேலம்  மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 15,000 மத்திய சங்க கட்டிட நிதி வழங்கப்பட்டதுகூட்டத்தில் சுமார் 350 ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்இறுதியாக தோழர். ஹரிஹரன். நன்றி கூறி சிறப்புக் கூட்டம் இனிதே முடிந்தது






















































01-01-2014 முதல் IDA 5 சதம் உயர்வு . . .

IDA increase is 5% from 01-01-2014.
It is learnt that the IDA increase, that has become due w.e.f. 01.01.2014 is 5%. With this IDA increase, the total IDA that has become payable from 01.01.2014 will be 90.5% (85.5% + 5 %). 
IDA உயர்வு 5%-01-01-2014 முதல்
01-01-2014 முதல் IDA உயர்வு 5 சதமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதனால் மொத்த IDA 90.5 சதமாக உயர்ந்துள்ளது எனவே,ஜனவரி 2014 சம்பளத்தில் 5%உயர்த்தி கிடைக்கும்.