ரூ.3600
கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் உடன்பாடு ரத்து
ஊழல் வெளியானதால் நடவடிக்கை
ஊழல் வெளியானதால் நடவடிக்கை
இத்தாலி நாட்டைச் சேர்ந்த அகஸ்ட்வெஸ்ட்லேண்ட் நிறு வனத்துடன் செய்து கொண்ட ரூ.3,600 கோடி மதிப் புள்ள ஹெலிகாப்டர் இறக்குமதி உடன்பாட்டை இந்திய அரசு புதனன்று ரத்து செய்துள்ளது.இந்தஉடன்பாட்டை இறுதி செய்வதற்காக ரூ.360 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகாரையடுத்து இந்த உடன்பாடு ரத்து செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பிரதமர் மன்மோகன் சிங்கை புதனன்று சந்தித்துப்பேசினார். அதன்பிறகு உடன்பாட்டை ரத்து செய்வது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இத்தாலியைச்சேர்ந்த ஆங்கிலோ-இத்தாலியன் நிறுவனமான அகஸ்ட்வெஸ்ட் லேண்ட்நிறுவனத்திடமிருந்து விவிஐபி பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன் மதிப்புரூ.3600 கோடியாகும். இந்த உடன்பாட்டை இறுதி செய்ய இந்தியாவைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பிரமுகர்களுக்கு ரூ.360 கோடி லஞ்சம்கொடுக்கப்பட்ட தாக தகவல்வெளியானது. இதனடிப்படையில் இந்நிறுவனத்தின் மீது இத்தாலி அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னரே இந்தியாவிலும் இந்தப் பிரச்சனை பெரிதாக எழுந்தது. இந்த ஊழல் குறித்து மத்தியபுலனாய்வுத்துறை விசார ணைக்கு உத்தரவிடப்பட்டது. முன்னாள் விமானப்படைத் தளபதியான எஸ்.பி.தியாகிக்கு இந்த ஊழலில் முக்கிய பங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளார். 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு உடன்பாடு செய்யப்பட்ட நிலையில் மூன்று ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவினால் வாங்கப்பட்டுவிட்டன.மீதமுள்ள ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான உடன்பாடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆங்கிலோ-இத்தாலிய நிறுவனத்துடன் சமரசத்தீர்வு முயற்சியில் இந்திய அரசு ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment