1982 ஜனவரி 19 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்ற போது தமிழகத்தில் நாக பட்டினம் மாவட்டம்,திருமெய்ஞானம் பகுதியில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் அஞ்சான், நாகூரான்,மன்னார்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஞானசேகரன் ஆகிய விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்னுயிரை ஈந்தனர்.தொழிலாளி வர்க்கத்திற்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் முகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -19 தியாகிகள் தினத்தை தொழிலாளர் வர்க்கம் கடைப்பிடித்து வருகிறோம்.
தோழர்களே!இதே,ஜனவரி-19-1982ல்தான் மத்தியரசு,பொதுத்துறை ஊழியர்கள் பொதுவேலை நிறுத்தத்தில் இரங்கியபோது , நமது தபால்-தந்தி தொழிற்சங்க இயக்கத்திலும் சில தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்து, தேசிய நீரோட்ட திசையில் செல்ல மறுத்து விட்டனர். இக்கால கட்டத்தில் நமது தபால் - தந்தி தொழிலாளியின் கோரிக்கை என்னவென்றால்,... .. .
* பொதுத்துறைக்கீடான ஊதியம் வழங்கப்படவேண்டும்.
* இடைக்கால நிவாரணம் ரூ.150 உடனே வழங்கவேண்டும்.
* விலைவாசி புள்ளி 344 வரையுள்ள பஞ்சப்படி சம்பளத்துடன் இணைப்பு.
* பஞ்சப்படி பார்முலா முறையில் மாற்றம் வேண்டும்.
* மத்தியரசு ஊழியர் அனைவருக்கும் போனஸ் வழங்கவேண்டும்.
* HRA,CCA போன்ற படிகளில் உயர்வு வேண்டும் .
ஆகவே,ஜனவரி -19 என்பது நமது நெஞ்சங்களில் மறக்கமுடியாத நாள் என்பதை நினைவில் கொண்டு,நமக்காக உயிர் தியாகம் செய்த அந்த தலைவர்களின் தியாகத்தை என்றும் மறவோம்.தியாகிகள் நாமம் வாழ்க....
No comments:
Post a Comment