Sunday 26 January 2014

65- வது குடியரசு தினம் --- - ஜனவரி -26

குடியரசு தினம் என்றால் என்ன?  சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பதை புரிய வைக்கும் பொறுப்பு இருப்பதால் இதை தொகுத்துள்ளோம்.குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச் சட்டம். மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.
சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடந்தக் காலகட்டத்தில் “1928 ஜனவரி 26 ம் நாளை இந்திய சுதந்திர நாள்என்று காந்தி அறிவித்தார்.  அவர் அறிவித்தப்படி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த நாள் தான் இன்று குடியரசு தினமாக போற்றப்படுகின்றது.  
அந்த போராட்ட நாட்களிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகள்.
இந்திய குடியரசு தினம் என்றால்முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் –  ஜனவரி  (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறதுவரலாறு  (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,
(1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறதுபின் அடக்கபடுகிறதுஇதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.
(1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம்இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.
(1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.
 (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவதுமத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.
(1920) – தீர்மானத்தை தொடர்ந்துமுதல் தேர்தல்
(1924) – மீண்டும் ஒரு தேர்தல்தேசிய கோரிக்கை என்ற தீர்மானம்சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்விஇந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்
(1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கைபம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள்  சி.ஆர்.தாஸ்,  சத்யமூர்த்தி, முகமது அலி ஜின்னா,  புலாபை தேசாய்.
(1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றதுஇதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடுஇந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது
(1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு –  காந்தி கலந்து கொள்கிறார்வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.
(1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடுஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறதுஇந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.
(1935) – இந்த பரிந்துரைகளைஇந்திய அரசாங்க மசோதாஎன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.
 (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சைஇந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடுபாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.
(1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல்இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.
(1947) – ஆகஸ்டு (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.
இந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில்  நவம்பர்  (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.
(1950) – ஜனவரி 26 (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.
இந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.
(1952) – முதல் குடியரசு பொது தேர்தல்!
சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் அந்த நாட்களில் ஆயிரம், லட்சம் சோகங்கள் மண்டிக் கிடக்கின்றன.  புழு பூச்சிகளாக லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துள்ளன.  அன்றைய நாட்களின் சுதந்திர தாகம் இன்று?
பீரங்கிகளை எதிர்த்து
சாலைகளில் ஓடி
துணிச்சலாக பெறப்பட்ட சுதந்திரம்
இன்று 
குண்டுத் துளைக்காத 
கூண்டுகளில் அடைப்பட்டு
மக்களிடம்
கையசைக்கின்றது

No comments: