Wednesday 29 January 2014

27.01.2014 தோழமை வாழ்த்துக்கள் . . .

அருமைத் தோழர்களே!கடந்த 27.01.2014 அன்று மாலை மதுரை லெவல் -4 வளாகத்தில் AIBSNLEA சங்கத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் மிக,மிக சிறப்பாக நடை பெற்றது. இக்கூட்டத்தில் துணை பொது மேலாளர் (நிதி) பதவியில் இருந்து கடந்த 31.12.2013 அன்று ஓய்வு பெற்ற திரு.ராஜேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும், அதிகாரிகள் சங்கங்களுக்கு அங்கீகார தேர்தல், மதுரையில் நடைபெற உள்ள அச்சங்கத்தின் மாநில மாநாடு குறித்த நிகழ்ச்சி யாகவும் ஆக மொத்தம் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பாக நமது மாவட்ட தலைவர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ்,மாவட்ட செயலர் எஸ்.சூரியனும் கலந்து கொண்டு தோழமைபூர்வமான வாழ்த்துக் களை பதிவு செய்தோம்.




No comments: