Sunday 12 January 2014

அகம் மகிழ்ந்த நிகழ்ச்சி ...ஓவிய கண்காட்சி . . .

அருமைத் தோழர்களே! வணக்கம் . . .
இன்றைய இளைஞர் மத்தியில் IT கல்விதான் உலகம் என்று எண்ணோட்டம் தலை தூக்கியுள்ள காலத்தில், பெற்றோர்கள் பலரும் என்பிள்ளை IT முடித்து வெளிநாடு சென்று சம்பாதிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிற அவசர உலகில்,நமது G.M(DEV) கிளச்செயலர்  தோழர்.T.ஈஸ்வரன் அவர்களின் புதல்வன் விக்னேஷ்குமார்,தமிழர் திருநாளை முன்னிட்டு ஒரு அற்ப்புதமான ஓவிய கண்காட்சியை,மதுரை காந்தி மீயுசியத்தில் சமர்ப்பித் துள்ளார். அனைவரும் (வெளிநாட்டவர் உட்பட) பாராட்டும் வண்ணம் அமைந் துள்ளது. இந்நிகழ்வு தினந்தோறும் அதாவது 12.01.2014 முதல்15.01.2014 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருக்கும் என்பதால் அனைவரும் கண்டுகளித்து,இளைய ஓவியனை பாராட்டி,வாழ்த்திட வேண்டுகிறோம். 
சிறப்பு ஓவிய கண்காட்சி துவக்கவிழா நிகழ்ச்சி கட்சிகளின் ஒரு சில . . . 


மதுரையில்உள்ளபாரம்பரியஓவியங்களைபாதுகாக்கவேண்டுகோள்
மதுரை அழகர்கோவில், மீனாட்சியம்மன் கோவில் களில் வரையப்பட்டுள்ள பாரம் பரியமான ஓவியங்களைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஓவியர் கே.சி.முருகேசன் கூறினார்.மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங் காட்சியகத்தில் ஞாயிறன்று ஓவியர் .விக்னேஷ் குமாரின் ஓவி யக்கண்காட்சி திறப்பு விழாநடைபெற்றது.இவ்விழாவிற்கு அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் .பெரியசாமி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன் வரவேற் புரையாற்றினார்.கண்காட்சியைத் திறந்துவைத்து ஓவியர் கே.சி.முரு கேசன் பேசியதாவது: மூன்று நாட்கள் நடைபெறும் இந்தஓவியக்கண்காட்சியை மதுரையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய காப் பாட்சியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், மதுரையில் ஓவியக்கண்காட்சி வைக்க இட மில்லை. கடந்த பல ஆண்டு களாக பழுதடைந்து கிடந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை மிக நல்லமுறையில் செப்பனிட்டு கண்காட்சிக்கு ஒதுக்கியுள்ளனர்.இந்த இடத்தை மதுரை யில் உள்ள ஓவியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் ஓவியக்கண்காட்சிக்கான இடங்கள் உள்ளது. மதுரையில் அப்படியான இடங்கள் மிகக்குறைவாகவே உள்ளது.ஆனால், மதுரையில் இப்படி கண்காட்சியை விட நகை, துணி கண்காட்சியைப் பார்க் கத்தான் கூட்டம் வருகிறது. அப்படியான கலாச்சாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. நமது பாரம்பரிய வழக்கங்கள் அனைத்தும் குகைகளில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு இருந்ததாலேயே நமது கலாச் சாரங்களை அறிய முடிந்தது. அப்படியான முயற்சிகளுக்கு ஓவியம் மிக அவசியம்.மதுரையில் இந்த ஓவியக் கண்காட்சியை வைத்துள்ள ஓவியர் விக்னேஷ்குமாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. அவருடைய பெரும்பாலான படைப்புகள் பொங்கல் திருநாளையொட்டி வைக்கப்பட் டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு, கதிர்சுமக்கும் பெண் என காட் சிகள் அருமையாக வாட்டர் கலரில் தீட்டப்பட்டுள்ளது. அது தவிர அக்ரிலிக் ஓவியமும் சிறப்பாக உள்ளது.இன்றைய உலகில் குழந்தைகளின் திறமைகளை பெற்றோர்கள் கண்டுகொள்வ தில்லை. குழந்தைகள் என்ன வாக விரும்புகிறார்கள் என்றஎண்ணத்தை மறக்க வைத்துபெற்றோர்களின் எண்ணங் களை அவர்கள் மீது திணிக்கிறார்கள்.இதனால் எத்த னையோ பேரின் திறமைகள் முடக்கப்படுகிறது. இந்த நடைமுறையை பெற்றோர்கள் கைவிட வேண்டும்.மதுரையின் பாரம் பரிய ஓவியங்கள் மீனாட்சியம்மன் கோவில் பொற்றா மரைக்குளத்திற்கு எதிரே உள்ள கிளிமண்டபம் அருகே வரையப்பட்டுள்ளது. இதே போல், அழகர்கோவிலில் ராமாயணம் முழு காட்சி களும் ஓவியங்களாக தீட்டப் பட்டுள்ளது. ஆனால், இந்த ஓவியங்கள் மேல் வயரிங் செல் லும் கம்பிகளை அடித்து சிதைத்துவிட்டார்கள். தற் போது இந்த காட்சிகளைக் காண முடியாதவாறு அந்தஅறைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து ஓவி யர்களை அழைத்து வந்து அன்றைய மன்னர்கள் அற்புத மாக வரைந்த ஓவியங்களை நாம் பாதுகாக்கத்தவறி வருகிறோம்.தமிழக அரசு இந்த ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஓவியர் கே.சி.முருகேசன் கூறினார். ஓவியர் .விக்னேஷ் குமார் நன்றி கூறினார். இவ்விழாவில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் செல்வின் சத்தியராஜ், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(.நி.)                                                                                                      நன்றி. . .தீக்கதிர்.

No comments: