Thursday, 9 January 2014

252 குடிநீர் நிறுவனங்களுக்குத் தடை: கேன் குடிநீர் நிறுத்தம்

தமிழகத்தில், 252 கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதுகேன் குடிநீர் தொடர்பான வழக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அனுமதி பெற வேண்டி, கேன் நிறுவனங்கள் தாக்கல் செய்ய விண்ணப்பங்கள் தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்தமிழகத்தில் இதுவரை 857 நிறுவனங்கள் குடிநீர் தயாரிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறினார்தண்ணீர் எடுக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி கேட்டல் உள்ளிட்ட காரணங்களுக்காக 252 நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்க முடியாது என பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னையில் ஒட்டியுள்ள பகுதிகளில் அனுமதி கோரி, 33 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதால், அது குறித்து சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தான் முடிவு செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர 572 நிறுவனங்களில் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக பொதுப்பணித்துறை சார்பில் கூறப்பட்டதுஇதனைத் கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், 252 கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குடிநீர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை விலக்கக்கோரி, தமிழகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் மாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

No comments: