Saturday, 11 January 2014

வைட்டமின் ‘இ’ எட்டு வேறுபட்ட வடிவங்களில் . . .

ஞாபகக்”குறைகளை” அகற்றும் வைட்டமின்இ’
உயிர்ச்சத்துக்கள் என்று அழைக்கப்படும் வைட்டமின்கள் மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். அவையின்றி மனிதன் வாழ்தல் கடினமாகும். உயிர்ச்சத்துகளில் ஒன்றான வைட்டமின்இ’ அதிகமாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஞாபகமறதிக் கோளாறுகள் அது குறைவாக இருக்கும் மூத்த குடிமக்களை விடக் குறைவாக இருக்கும் என்று ஈஸ்டர்ன் பின்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்று கூறியுள்ளது. ஞாபக சக்திகுறித்த நடைமுறைகளில் வைட்டமின் குடும்பம் ஒரு சிறப்பான பங்கினை ஆற்றுகின்றன. உடலின் நீர்ச்சத்தில் இருக்கும் வைட்டமின்இ’ யை அளப்பதுதான் ஒருவருக்கு அதிகஅளவில் வைட்டமின்இ’ இருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்கும் நம்பத்தகுந்த வழியாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இன்று வரைவைட்டமின்இ’ யின் ஒரு வகையானடோகோபெரோலைக் கொண்டுவைட்டமின்இ’ க்கும் ஞாபகமறதிக்கும் உள்ள் உறவை தீர்மானிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.ஆனால் வைட்டமின்இ’ எட்டு வேறுபட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவையனைத்தும் டோகோபெரோல் மற்றும் டோகோடிரைய னோல்களாகும். இவையனைத்தும் ஆண்டாக்சிடெண்டுகளாகும் என்று எக்ஸ்பிரிமெண்டல் ஜெரோண்டோலாஜி என்ற இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. ஞாபகச்சக்தி கோளாறு இல்லாத 140 மூத்தபின்லாந்து மக்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அதன்மூலம் அதிக அளவு வைட்டமின்’ இ’ ஞாபகச்சக்தி கோளாறுகளில் இருந்து விடுதலை அளிக்கிறது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

No comments: