Friday 3 January 2014

திருப்புமுனை ஏற்படுத்திய திருப்பாலை சிறப்புக்கூட்டம் . . .

அருமைத் தோழர்களே!
02.01.2014 அன்று மதுரை-திருப்பாலை கிளையில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்




ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொன்னால்அது மிகையாகாது.சிறப்புக்கூட்டத்திற்கான ஏற்பாட்டை நமது BSNLEU கிளச்சங்கம் செய்திருந்த விதம் வந்திருந்த அணைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.திருப்பாலை மெயின் ரோட்டிலிருந்து,தொலைபேசியகம் வரை எங்கு நோக்கினும் நமது BSNLEU செங்கொடி தான் காட்சி அளித்தது. நிகழ்சிக்கு அருமைத் தோழர்.P.மணிமுத்து அவர்கள்  அமைதியின் சொரு பமாய் தலைமை ஏற்று நடத்தினார்.விண்ணதிரும் முழக்கங்களை மாவட்ட அமைப்புச்செயலர்தோழர்.N.செல்வம் எழுப்ப,தோழர்.பன்னீர்செல்வம் நமது பெருமை மிகு BSNLEU சங்க கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை தோழர்.P.முருகன் வரவேற்று உரை நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழியர்.N.வசந்தா அவர்கள், இக்கால கட்டத்தில் மறைந்த தோழர்கள் K.ஆண்டிச்சாமி, T.S.ராஜன், இயற்கை விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி  உரை நிகழ்த்திய பின் கூட்டத்தில் 2 நிமிடம் அணைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.சிறப்புக்கூட்டத்தில் 7 பெண்கள் உட்பட 62 தோழர்கள் கலந்து கொண்டனர் என்பது மிக சிறப்பம்சமாகும்.அதைக்காட்டிலும் மிக,மிக சிறப்பான அம்சம்  இலாக்காவில் பணி நிறைவு செய்தாலும்,நமது சங்கப் பணிகளில்,தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும் அருமைத் தோழர் ,S.ராமலிங்கம், G.K.வெங்கடேசன்,M.சௌந்தர் ஆகிய மூத்த தோழர்களின் பங்கேற்பு என்பது  இளைய தோழர்களுக்கு கூடுதல் உற் சாகத்தை ஏற்படுத்துகிறது,தொடரட்டும் அவர் களின் பங்களிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட சங்க நிர்வாகி களுக்கும்,நமது BSNLEU சங்கத்தில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர் களுக்கும் கதராடை அணிவித்து கவிர்விக்கப்பட்டது. அதன்பின் தோழியர் .S.M.புஷ்பராணி மாவட்ட துணை பொருளர் திருப்பாலை கிளையை வாழ்த்தி பேசினார்.   தோழர். S.ஜான் போர்ஜியா மாநில துணைத் தலைவர்,நமது BSNL நிறுவன பாதுகாப்பு,வளர்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். அதற்கடுத்து தோழர். C.செல்வின் சத்தியராஜ் மாவட்ட தலைவர் தனது உரையில் மத்திய அரசு கடைபிடிக்கும் மக்கள்/ஊழியர் விரோத கொள்கைகள் குறித்தும்,நமது BSNLEU சங்கம் சாதித்த சாதனைகள் பற்றியும் பேசினார். இறுதியாக மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் தனது சிறப்புரையில் நமது மதுரை மாவட்டத்தில் நமது BSNLEU சங்கம் நிகழ்த்திவரும் சாதனை களை,வெற்றிகளை பட்டியல் இட்டதோடு, நமது BSNL நிறுவனம், வங்கி, LIC போன்ற மத்திய,மாநில பொதுத் துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டு மெனில்,மக்கள் நலன் பேனவேண்டுமெனில் மத்தியில்,காங்கிரஸ்/BJP அல்லாத மாற்றுக்கொள்கை கொண்ட,இடது சாரிகள் துணையோடு அமையக் கூடிய ஆட்சியை ஏற்படுத்து வதற்குமுனைந்து  பாடுபட வேண்டியது நம்மை போன்ற தொழிலாளி வர்க்கத்தின் முழுமுதற் கடமையாகும் என சுட்டிக் காட்டினார்.முடிவில் தோழர். C.முத்துவேல் நன்றி கூற இனிதே சிறப்புக் கூட்டம்  நிறைவுற்றது.அணைவரும் பாராட்டும் வண்ணம் மிக மிக எழுச்சியோடு சிறப்புக்கூட்டத்தை நடத்திய திருப்பாலை கிளைச் சங்கத்தை, தோழர்களை  மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக,மனதார பாராட்டுகிறது.

No comments: