அருமைத் தோழர்களே! ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கு வதில் அளவு கடந்த தாமதத்தை கடைப்பிடித்து வரும் ஒப்பந்தகாரரின் போக்கை கண்டித்து மதுரை மாவட்டத்தில் கேபிள் பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்கள் 10.01.2014 முதல்" work stop" செய்யப் படும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 08.01.2014-ல் கடிதம் கொடுத்திருந்தோம்.இதனை ஒட்டி நமது GM,DGM ஆகியோர் உடனடியாக தலையிட்டு ஒப்பந்த காரிடம் உரிய அறிவுறுத்தல் நிர்வாகத்தால் செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் ஒப்பந்தக்காரர் உடனடியாக அக்டோபர் மாதத்திற்கான பில்லை 09.01.2014 அன்று சமர்ப்பித்திருக்கிறார்.இதை தொடர்ந்து நமது மாவட்டசங்கம் சார்பாக தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ், V.சுப்புராயலு, S.சூரியன் ஆகியோர் நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த் தையில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன. . . . .
* நவம்பர் 2013க்கான சம்பளம் உடனடியாக வழங்கப்படும்.
* டிசம்பர் 2013க்கான சம்பளம் 15.01.2014க்குள் வழங்கப்படும்.
*நமது GM விடுப்பில் இருந்து வந்தவுடன் TENDER-ல் ஏற்பட்டுள்ள பிரச்சனை உட்பட அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.
எனவே,நமது BSNLEU & TNTCWU சங்கங்கள் அறிவித்திருந்த "WORK STOP" போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆகவே, ஒப்பந்த ஊழியர்கள் அணை வரும் எப்பொழுதும் போல் பணிக்கு சென்று உரிய முறையில் பணியாற்றிட வேண்டுமாய் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.
ஊழியர்களின் உணர்வை புரிந்து கொண்டு போர்கால நடவடிக்கையாக தலை யிட்டு,பிரச்சனை தீர்விற்கு வழிவகுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு, குறிப்பாக விடுப்பில் இருந்த போதும் மிகுந்த அக்கறையுடன் தலையிட்ட நமது GM, மற்றும் DGM ஆகியோருக்கு நமது பாராட்டுக்களை உரித்தாக்கு கிறோம்.
No comments:
Post a Comment