Thursday 16 January 2014

மதுரை பல்கலைகழகத்தின் மாண்பு காப்போம்! . . .

பல்கலைக்கழகமா ? பழிவாங்கும் கூடமா ?
அன்பிற்கினியவர்களேமதுரைகாமராசர் பல்கலை கழகம் , மதுரையின் பெருமை,தென்மாவட்ட மக்களுக்கு மட்டு மல்லாது,தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களின் கல்விக் கனவை ஈடேற்றி வருகிற மகத்தான கல்வி நிறுவனம்.சாதாரண மக்களுக்கு கல்வியை சாத்தியமாக்கி வருகின்ற சிறப்பும் கொண்டது.ஆட்சியும்,அதிகாரமும் மக்களுக்குத்தான் பயன்பட வேண்டும்!. மக்களுக்கான சேவை புரிபவர்களுக்குத்தான் துனைபுரியவெண்டும்!என்று வாழ்ந்து வழிகாட்டிய பெருந் தலைவர் காமராசர்.கல்விக்கண் திறந்த அவரது பெயரோடு இயங்கிவருகிற மதுரை பல்கலைகழகம்,இன்று அதிகார பீடமாகி, மாணவர்களையும்,மாணவர்களுக்காக உழைப்பவர்களையும் பழிவாங்கும் இடமாக மாறிவருவது நமக்கெல்லாம் கவலை யளிப்பதாகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் திருமதி.கல்யாணி மதிவாணன் அவர்கள்,மாணவர்களையும்,பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களையும் சர்வாதிகாரப் போக்கோடு அணுகுவதோடு,அச்சுறித்தியும் வருகிறார்.மாணவர் விடுதியில் தண்ணீர்,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் நீடிப்பதும்,அவற்றை நிவர்த்தி செய்யக் கோரும் மாணவர்களின் கோரிக்கை புறக்கனிக்கப் படுவதோடு, அச்சுறுத்து வதும், தண்டிக்கப்படுவதும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெறுவதாக அறிகிறோம்.
எவரும் கேள்வி கேட்கக்கூடாது,என்ற துணைவேந்தரின் போக்கினால், அறவழிப் போராட்ட ங்களில் ஈடுபட்ட மாணவர்களும்,ஆராய்ச்சி மாணவர்களும்,பேராசிரியர்களும் குறிவைத்து பழிவாங்கப்பட்டு உள்ளனர்.மாற்றுத்திறனாளி  என்றும் பாராமல் மாணவர்களை பழிவாங்கும் கொடூரத்தையும் துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார்.பல்கலைக்கழக பணிநியமனங்களில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறித்திய பேராசிரியப் பெருமக்களும் பழிவாங்கப்பட்டு உள்ளது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும்.பேசித் தீர்க்கும் முயற்ச்சிக்கு மாறாக,ஆட்சியர் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழிகாட்டுதல்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.இதுதான் துணைவேந்தரின் நிலையெனில்,பிரச்சனைகளுக்கான தீர்வு தான் என்ன?
நியாமான கோரிக்கைகளுக்கு,தீர்வு தர மறுக்கும் அதே வேளையில் அதெற்கென போராடுகிற மாணவர்களை காவல்துறை கொண்டு அடக்குவதும்,கைது செய்வதும்,பல்கலைக்கழக ஆசிரியர் களை, அலுவலர் களை,அவமதிப்பதும்,அவர்களை அனைத்து வகையிலும் பிரித்து,துண்டாதுவதும் அமைதியற்ற சூழல் உருவாகும்.ஆகவே,இது மதுரை பல்கலைகழகத்தின் பிரச்சனை மட்டுமல்ல,மதுரை மக்களின் பிரச்சனை,தமிழக மக்களின் பிரச்சனை,கல்வி தனியார் கைகளுக்கு சென்று விடக்கூடாது.எதிர்கால தலைமுறைகளின் கல்விக் கனவு  ஈடேறுவதை உறுதிசெய்யும் பிரச்சனை என்ற வகையில் மதுரை நகர தொழிற்சங்க இயக்கங்கள் சார்பாக முறைஇடுகிறோம்.
பழிவாங்கும் போக்கோடு,தன்னிச்சையாக செயல்படும் துணைவேந்தர் மீது தக்க நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்து அமைதியான கல்வி சூழலை உருவாக்கவேண்டும் என்க் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ....23.01.2014 - கையெழுத்து இயக்கம் ,28.01.2014 - கண்டன பேரணி,29.01.2014 - கலக்டெரிடம் மனு கொடுப்பது.   வாருங்கள் தோழர்களே!மதுரை பல்கலைகழகத்தின் மாண்பு காப்போம்!உறுதி செய்வோம்.   போராட்ட வாழ்த்துக்களுடன் ...எஸ்.சூரியன் - D/S-BSNLEU

No comments: