Tuesday 21 January 2014

நாக்பூரில் : இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு எழுச்சிப் பேரணியுடன் துவக்கம்...

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 23வது மாநாடு நாக்பூர் நகரில் ஜனவரி 20 திங்களன்று 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் துவங்கியது.நாக்பூர் நகரில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு நடந்த இப்பேரணியில் மிக அதிக எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் பங்கேற்றனர்.பொது மாநாட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினருமான சீத்தாராம் யெச்சூரி துவக்கிவைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கவுரவ உறுப்பினர் என்று தன்னை வரவேற்றதைக் குறிப்பிட்ட யெச்சூரி, தோழர்கள்சரோஜ்சவுத்ரி,சுனில்மைத்ராஉள்ளிட்டோருடன் ஈடுபாட்டை   குறிப்பிட்டு இன்சூரன்ஸ் சங்கத்தின்  மாநாடுகளில் கலந்துகொள்ளத் துவங்குவதற்கு முன்பே தொடர்பில் இருந்துவந்ததாகக் குறிப் பிட்டார். முன்னதாக, சங்கக் கொடியை தலைவர் அமானுல்லா கான் ஏற்றிவைக்க, மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், ஆர்.எஸ்.ரூய்க்கர் தொழிலாளர், சமூகக் கலாச்சார ஆய்வு மையத்தின் இயக்குநருமான டாக்டர்.சீனிவாச கண்டவாலே, மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். எம்.கிருஷ்ணன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம், நமது பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  தோழர்.பி.அபிமன்யு, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவரான மூத்த தோழர் சந்திரசேகரபோஸ், சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிறக்க,வெற்றிபெற நமது பி .எஸ்.என்.எல். ஊழியர் மதுரை  மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.



No comments: