கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு : ஏழைகளின் வயிற்றில் அடிப்பதா?
சட்டவிரோதமாக ஆதார் அட்டை கேட்டு மானியத்தை ஒழிக்கும் மத்திய அரசு மானியம் இன்றி கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மேலும் 220 ரூபாய் உயர்த்தி இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. “எண்ணெய்க் கம்பெனிகள் மானியம் இன்றி கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 220 ரூபாய் வரை உயர்த்தி இருப்பது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. ஏற்கனவே விலைவாசி உயர்வால் விழிபிதுங்கியுள்ளமக்கள் மீது மேலும் தாங்க முடியாத அளவிற்கு அது சுமைகளை ஏற்றிவிடும்.மானிய விலையில் கொடுக்கப்படும் சிலிண்டர்கள் ஆண்டுக்கு ஒன்பது என்று ஏற்கனவே உச்சவரம்பு இருப்பதால், மக்கள் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களை அதீத விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது.ஆதார் அட்டை சட்டவிரோதம் மேலும், எண்ணெய்க் கம்பெனிகள், மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஆதார் அடையாள அட்டைகளைக் கொண்டுவர வேண்டும் என்று மக்களை நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமாகும்.அவ்வாறு கோருவதற்கு அவற்றிற்கு அதிகாரமும் கிடையாது. இது, மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் அளிப்பதை மறுப்பதற்கான மற்றொரு வழியாகும். மேலும் இது, இறுதித் தீர்ப்பு வரும் வரை ஆதார் அட்டை பயன்பாட்டை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணைக்கு எதிரானதுமாகும்.ஆதார் அடையாள அட்டையுடன் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய வேண்டும் என்கிற கட்டளையை நிறுத்தி வைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment