Friday, 17 January 2014

எல்ஐசி முகவர்கள் (லிகாய்) மாநாடு - மதுரையில் பேரணி


தோழர்.பா.விக்ரமன் சங்க கொடி அசைத்து பேரணியை துவக்கிவைத்தார்.

தோழர்.ஏ .கே.பத்மநாபன் மாநாட்டு துவக்கவுரை நிகழ்த்திய போது . . .
எல்ஐசி முகவர்களை வேலையிழக்கச்செய்யும் நேரடி விற்பனை முயற்சியைக் கைவிட்டு எல்ஐசி வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் திகழும் முகவர்களைப் பாதுகாக்க வேண்டும் எல்ஐசி நிர்வாகம் உடனடியாக குறைந்த பட்ச வணிக விதியை திரும்பப்பெற வேண்டும் என லிகாய் அமைப்பின் 4 வது தென்மண்டல மாநாடு வலியுறுத்தியுள்ளது.மதுரையில் வெள்ளியன்று பொதுமாநாடு நடைபெற்றது. இதையொட்டி முனிச்சாலை யில் இருந்து துவங்கி எல்ஐசி முகவர்களின் எழுச்சிமிகு பேரணியை சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி அங்கிருந்து சிமிண்ட்ரோடு வழியாக செல்கையில் தெப்பக்குளம் அருகே மதுரை நகர அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாழ்த்துமுழக்கங்களுடன் வர வேற்பளிக்கப்பட்டது. சிஐடியு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஏஐஐஇஏ, வாலிபர் சங்கத்தலைவர்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.பேரணி மாநாடு நடைபெறும் சமூகவிடுதலைப் போராளி எம்.தங்கராஜ் நினை வரங்கிற்கு சென்றடைந்தது.அங்கு நடைபெற்ற பொது மாநாட்டிற்கு லிகாய் தென்மண்டலத்தலைவர் .வி.பெல்லார்மின் தலைமை வகித்தார். தென்மண்டல பொருளாளர் .பாலகிருஷ்ணன், தமிழக மாநில செயலாளர் எஸ்.சுதானந்தனம், கேரளா மாநிலச்செயலாளர் டி.கே.விஸ்வன், மதுரை கோட்டத்தலைவர் எம்.ஆர். வெங்கட் நாராயணா, மதுரை கோட்டச்செயலாளர் கே.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான இரா.அண்ணாதுரை வரவேற் புரையாற்றினார்.சிஐடியு அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் மாநாட்டினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். லிகாய் செயல்தலைவர் எஸ்.எஸ்.போத்தி, பொதுச் செயலாளர் பி.ஜி.திலிப், என்எப்ஐஎப்டபிள்யூஐ துணைத் தலைவர் எஸ்.மரியவில் லியம், ஏஐஐஇஏ கோட்டப் பொதுச்செயலாளர் நா. சுரேஷ்குமார், சிஐடியு மாவட்டச்செயலாளர் வீ.பிச்சை உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர். வரவேற்புக்குழு செயலாளர் எம். செல்வராஜ் நன்றி கூறினார்.தீர்மானங்கள் : மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: எல்ஐசியில் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்ஐசி பாலிசியை 55 வய துக்கு மேல் உள்ளவர்கள் வாங்கு வதில் உள்ள சிரமங்களைத் தீர்த்து அவர்களுக்கும் பாலிசி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலிசிதாரர்கள் எடுக்கும் பாலிசிகளுக்கு விதிக்கப்படும் சேவை வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். குறைந்த பட்ச வணிகவிதியால் லட்சக்கணக்கான முகவர்கள் எல்ஐசியில் தங்கள் வேலையை தொடர முடியாமல் முகவர் வேலையை இழந்து தவிக்கும் சூழலில், எல்ஐசி நிர்வாகம் உடனடியாக குறைந்தபட்ச வணிக விதியை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு ஜன-18 ம் தேதி நடைபெறுகிறது. லிகாய் அமைப்பின் அகில இந்திய தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கலந்து கொண்டு சிறப் புரையாற்றுகிறார்.                                      நன்றி ......தீக்கதிர்

No comments: