Wednesday 8 January 2014

நமது G.S தோழர்.P.அபிமன்யு பாராட்டு விழா...

அருமைத் தோழர்களே! 07.01.2014 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு  சென்னையில் உள்ள ,காமராஜ் அரங்கில் மிக கோலா கோல மாக  அருமைத் தோழர். நமது  BSNLEU, அகில இந்திய பொதுச் செயலர்.  தோழர். P.அபிமன்யு அவர்களுக்கு  பாராட்டு விழா...100 க்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து கொண்ட வண்ணமயமான பணி நிறைவு விழா நடைபெற்றது.இவ் விழாவிற்கு தோழர்கள், K.மாரி முத்து,S.யோகலிங்கம் ஆகியோர் கூட்டுத்தலைமை ஏற்றனர் ,இவ் விழா வில்  . . . .  .
தோழர்.A.K. பத்மநாபன்,  CITU 
தோழர்.P.சம்பத் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி 
தோழர்.வள்ளிநாயகம், FNTO
தோழர்.V.சுப்புராமன் , TEPU
தோழர்.ஆர்.கே , NFTE
தோழர்.ரவீந்திரன் , SEWA
தோழர்.ஆண்டியப்பன் ,FNTOBE
தோழர்.சுவாமிநாதன், AIIEA
தோழர்.பட்டாபி ,NFTE
தோழர்.கோபிநாத் ,SNEA
தோழர்.சிவகுமார் ,AIBSNLEA
தோழர்.புனிதா உதயகுமார் ,BSNLEU
தோழர்.சுந்தரராஜன் ,SNEA
தோழர்.C.K.நரசிம்மன், AIPDPA
தோழர்.V.P.இந்திரா ,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு 
தோழர்.P.முருகையா ,ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
தோழர். VAN.நம்பூதிரி ,BSNLEU
தோழர்.K.கோவிந்தராஜ் ,C/S-BSNLEU-சென்னை 
தோழர்.S.செல்லப்பா ,C/S-BSNLEU-தமிழ் மாநிலம் 
. . . . . . . . . இறுதியாக தோழர்.P.அபிமன்யு ஏற்புரை நிகழ்த்தினார்.நமது மாவட்டத்திலிருந்து 51 தோழர்கள் கலந்து கொண்டனர் என்பது பாராட்டுக்கு உரிய செயலாகும்.நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்.P.அபிமன்யு அவர்களுக்கு ஒரு புத்தகம் ஒன்று நமது மாவட்ட செயலர் S.சூரியன் நினைவு பரிசாக அளித்தார்.தோழர்.அபி அவர்களின் பணிநிறைவு காலம் குடும்பத்தாருடன் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க,வாழ்க என வாழ்த்துகிறோம்.                  .....என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன்.


சென்னையில்  நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர்                பி. அபிமன்யு பணி நிறைவு பாராட்டு விழாவில் பேசிய தலைவர்கள் உரை வருமாறு:
சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் .கே.பத்மநாபன்
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 60 சதவீத தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சிக்கும் அரசை எதிர்த்து ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டியுள்ளது. இங்கேபேசிய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு இயக்குநர் .என்.ராய் கூறியது போல் வருங்காலம் பொதுத்துறை நிறுவனங்களின் காலமாக இருக்கப்போகிறது. மீண்டும் பொதுத்துறை நிறுவனங்களின் தேவை எழுந்துள்ளது. அப்படிப்பட்ட காலம் வெகு விரைவாக வரப்போகிறது. அப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் பெரும்லாபமீட்டும். கடந்த காலங்களை போல் அல்லாமல் நாட்டை பற்றி சிந்திக்கிற அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை பற்றி சிந்திக்கிற இயக்கமாக தொழிற்சங்க இயக்கம் மாறியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்படும் தாராளமய தனியார் மய உலகமய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்குதல்கள் தொழிற்சங்க ஒற்றுமை மேலும் பலப்படுத்தியுள்ளது. பிஎஸ் என்எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கிற போராட்டத்தில் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்கிற போராட்டத்திலும் பிஎஸ்என்எல் தொழிலாளர்களும் ஊழியர்களும் முன்னிற்க வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனம் என்பது நாட்டின் சொத்து.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத்
பொதுத்துறை நிறுவனம் என்றாலே ஊழல் நிறைந்த பணித்திறன் குறைந்த நிறுவனம் என்று பொதுக் கருத்தை உருவாக்க ஒருசிலதீய சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்றாலே ஊழல் என்று மாறிவிட்டதை 2ஜி அலைக்கற்றை ஊழலில் பார்த்தோம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமல்லாமல் ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை பற்றியும் பிஎஸ்என்எல் இயு பேசியிருப்பது பாராட்டுக்குரியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழிக்க முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் கனவை தகர்த்து இந்தியாவில் அசைக்க முடியாத பொதுத்துறைநிறுவனம் பிஎஸ்என்எல் என்பதை நிலைநாட்ட தொழிலாளர்களின் ஒற்றுமை தொழிற்சங்க ஒற்றுமை என்பதே சங்கத்தின் அடிநாதமாக ஒலிக்கவேண்டும்.பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்க அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதிஏற்கும் விழாவாக இது அமைந்துள்ளது.
பிஎஸ்என்எல்இயூ அகில இந்திய தலைவர்வி..என். நம்பூதிரி:
டெலிகிராப் முறையை ஒழித்ததை போல் தரைவழிதொலைபேசி முறையை ஒழித்துக்கட்ட தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எகனாமிக் டைம்ஸ் ஏடு அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. ஏனென்றால் தரைவழி தொலைபேசி முறையை ஒழித்துவிட்டால் பிஎஸ்என்எல் தானாக ஒழிந்துவிடும் என்று சில தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. தரைவழி தொலைபேசி முறை ஒழிக்கப்பட்டால் அதோடு பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒழிக்கப்பட்டு விடும். எனவே தனியார் நிறுவனங்களின் முயற்சியை முறியடிக்க ஒன்றுபடுபோராடுமுன்னேறு என்ற நமது முன்னோடிகளின் முழக்கத்தில் உறுதியாக இருக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மத்திய அரசின் புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பதில் ஒன்றுபடவேண்டும். அபிமன்யூ போன்ற தொழிற்சங்கத்தலைவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொழிலாளி வர்க்கத்திற்காக பணியாற்றுவதில் நமக்கு ஒய்வே இல்லை.
ஏற்புரை நிகழ்த்திய பி.அபிமன்யு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கல் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது. இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக முக்கியத்துறையாக உள்ள பிஎஸ் என்எல் தனியார்மயமானால் நமது நாட்டின் ரகசியங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விடும். எனவே பொதுத்துறை என்ற பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாவது என்பது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தாக முடியும்.
நன்றி  தீக்கதிர்

No comments: