08.01.2014 BSNLEU & TNTCWU செயலக கூட்டம்
அருமைத் தோழர்களே! 08.01.2014 மாலை 6 மணிக்கு நமது BSNLEU சங்க அலுவலகத்தில் BSNLEU & TNTCWU மாவட்ட சங்கங்களின் அவசர செயலக கூட்டம் தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ் மற்றும் K.வீரபத்திரன் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது.ஆய்படு பொருளாக . . . . .
* அளவு கடந்த காலதாமதமாகும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம்.
* புதிதாக நியமிக்கப்பட உள்ள TM களின் மாற்றல் குறித்து.
* 07.01.2014 சென்னை கருத்தரங்கம் & தோழர்.அபி பாராட்டு விழா.
நமது மாவட்டத்தில் கேபிள் பணி ஒப்பந்தகாரர் சில பகுதிகளில் 3 மாதமாக நமது ஒப்பந்த ஊழியர் களுக்கு சம்பளம் வழங்காமல் அலச் சிய போக்கு மற்றும் அக்டோபர் முதல் பில் கொடுக்காத மந்தநிலை, எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஊழியர்கள் சந்திக்கவேண்டிய சூழ் நிலையில் இதுகாறும் டிசம்பர் 2013 க்கான சம்பளம் குறித்த எந்த ஆயத்த பணிகளும் இல்லாததால் நாம் பல முறை நமது நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியுள்ளோம். மேலும் கேபிள் பணிக்கான பழைய ஒப்பந்தம் டிசம்பர் 2013-ல் முடிந்துள்ள சூழலில் புதிய ஒப்பந்தகாரரை தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம்,பழைய ஒப்பந்தக் காரர்களிடம் தொடர்ச்சியான EPF, ESI, VDA, BONUS, TOOLS ஆகியவை குறித்தும் தீர்மானிக்க வேண்டியது பற்றி நிர்வாகத்திடம் இறுதி படுத்த வேண்டியுள்ளது. இச் சூழல் குறித்து நிர்வாகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்,இல்லாத பட்சத்தில் 10.01.2014 தேதி வேலைநிறுத்தம் (WORK STOP) செய்ய வேண்டியத்தை நிபந்தத்தை நிர்வாகம் நமக்கு தந்துவிடக்கூடாது என 08.01.2014 அன்று சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நமது சங்கங்கள் சார்பாக கடிதம் கொடுத்துள்ளோம்.
ஆகவே,இவை பற்றி ஆலோசித்த செயலக கூட்டம் கிளைச்சங்கங்கள் WORK STOP தயார்நிலை படுத்துவது என முடிவு செய்துள்ளது.நமது GM அவர்கள் விடுப்பில் இருப்பதால் தான் நாம் இந்த முடிவை மிக தாமதமாக எடுத்துள்ளோம். இருப்பினும்,இனியும் பொறுப்பதற்கு வேறு வழியில்லை என்பதால் இம்முடிவை எடுத்துள்ளோம்.நமது கிளைகள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டு கிறோம்.சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment