Friday 10 January 2014

நிலக்கரிஊழல்உண்மைதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்...

நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடந்தது உண்மைதான் என்பதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முதல் முறையாக ஒப்புக்கொண் டுள்ளது. ரூ.1.86 லட்சம் கோடி அளவிற்கு நாட்டின் அரிய வளமான நிலக்கரி சூறையாடப்பட்ட இந்த வரலாறு காணாத ஊழலை மறைப்பதற்கு கடுமையாக முயற்சித்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அடுத்தடுத்து ஆதாரங்கள் சிபிஐ வசம் சிக்கியுள்ள நிலையில் வேறு வழியின்றி, உச்சநீதிமன்றத்தில், நிலக்கரி படுகை ஒதுக்கப்பட்டதில் தவறுகள் நடந்ததை ஒப்புக்கொள்வதாக கூறியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரந்துவிரிந்து கிடக்கும் நிலக்கரி படுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டு, நாட்டின் கருவூலத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.1.86 லட்சம் கோடிக்கும் அதிகமான வளங்கள் பல்வேறு தனியார் பெரும் நிறுவனங்களால் சூறையாடப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி வெளிவரத் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில், மேற்கண்ட நிலக்கரி ஊழலையும் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அலுவலகம் (சிஏஜி) கண்டுபிடித்தது. நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் கொள்கையை, தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி படுகை ஒதுக்கீடு என்ற பெயரில் 11வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மன்மோகன் சிங் அரசு அமலாக்கியது. அப்போது 86 நிலக்கரிப் படுகைகள் தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் விதிமுறைகள் மீறப்பட்டும், தளர்த்தப்பட்டும் மிகப்பெரும் ஊழல் நடந்தது. வளங்களைக் கொள்ளையடிக்க தனியார் நிறுவனங்களுக்குத் தாராளமாக வழி செய்யப்பட்டது.
நிலக்கரி ஊழலை சிஏஜி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அதை மன்மோகன் அரசு விடாப்பிடியாக மறுத்துவந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டு செயலாற்றி வரும்நாட்டின் உயரிய தணிக்கை அமைப்பான சிஏஜியையும் மலினப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்நிலையில்தான், நிலக்கரிச் சுரங்கங்களில் இப்படிப்பட்ட ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்றது தொடர்பாக ஏராளமான விபரங்கள் வெளியாகின. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிப்பது என முடிவுசெய்யப்பட்டது. இதன்பின்னரே மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) நிலக்கரி ஊழல் தொடர் பாக விசாரணையைத் துவக்கியது. முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக 16 வழக்கு களை பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், 1993ம் ஆண்டிலிருந்தே பாஜக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலக்கரிப் படுகைகள் உட்பட அனைத் தையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரு கிறது. இந்த வழக்கில் வியாழனன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி..வாஹன்வதி கூறியதாவது:-நாங்கள் (மத்திய அரசு) எப்போதும் உரிய வழியில்தான் நிலக்கரிப்படுகைகளை ஒதுக்கீடு செய்தோம். ஆனால் கடந்த 1991-92ல் மின் உற்பத்தி நிலை சற்று மாற்றமடைந்திருந்தது. இந்நேரத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு தேவைகள் அதிகம் இருந்தது. இதனால் ஒதுக்கீட்டு விதிகளை அரசு மாற்றியிருக்கலாம். இந்த ஒதுக்கீட்டில் இன்னும்சரியாக நடந்திருக்க முடியும். தேசிய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. சில நேரங்களில் தவறாகவும் போயிருக்கலாம். நிகழ்வுகளில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனதுவாதத்தின் போது தெரிவித்தார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தாக்கல் செய்த விபரங்களில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் விருப்பத்தின்படியே நிலக்கரி படுகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் இன்னும் நிலக்கரியை வெட்டியெடுக்கத் துவங்காததால் அந்த ஒதுக்கீடு என்பது இன்னும் முதல் நிலையிலேயே இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதை முற்றிலும்மறுத்து, ஒதுக்கீட்டில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக் கிறார்.முன்னதாக நிலக்கரி ஊழல் விவகாரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிபடுகை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் நிலக்கரி அமைச்சகத்திலிருந்து திடீரென காணாமல்போன சம்பவமும் நாட்டையே உலுக்கியது.
நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது. ஆனால் அப்போதும், நிலக்கரி ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் பிடிவாதமாகக் கூறினார். இந்தப்பின்னணியில் முதல் முறையாக நிலக்கரி படுகை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை மத்திய அரசு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டிருக்கிறது.(பிடிஐ) தகவல்களுடன்) 

No comments: