Thursday 23 January 2014

22.01.2014 ஆண்டிபட்டியில் புதியகிளை துவக்கம். . .


அருமைத் தோழர்களே! நமது சங்கத்தின் வளர்ச்சிப்பாதையின் மற்றொரு மைல்கல்லாக பழங்காநத்தம்,திருப்பாலை அந்த வரிசையில் அடுத்த கட்டமாக ஆண்டிபட்டியில் 22.01.2014 மாலை தொலைபேசியகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற புதியகிளை துவக்க விழா கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.சிறப்பான ஏற்பாட்டை ஆண்டி பட்டித்தோழர்கள்,தேனி கிளை உதவியுடன் செய்து இருந்தார்கள்.  உணர்ச்சி        மிகு        கோஷங்களுக் 
கிடையே  தோழர்.ஜேம்ஸ் நமது சங்க கொடியை ஏற்றி வைத்து பெருமை சேர்த்தார்.நிகழ்ச்சிக்கு தோழர்.தேசிங்கு தலைமை தங்கினார் ,மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் துவக்கவுரை நிகழ்த் தினார்.அதனை தொடர்ந்து தோழர்கள் சிரில், சந்திரசேகர், ஸ்ரீநிவாசன், நெடுஞ்செழியன், சுப்புராஜ், சுப்புராயலு, அழகர்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அதன்பின்  மாவட்ட நிர்வாகி களுக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டப் பட்டது. அதன்பின் தோழர்கள்  என்.தங்கப்பன், எ.தமிழ்வாணன், ஜி.அற்புதராஜ் ஆகியோர் முறையே, தலைவர்,செயலர்,பொருளர் கொண்ட புதியகிளைநிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இறுதியாக மாநில அமைப்புச்   செயலர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த் தினார்.முடிவில் தோழர்.தமிழ்வாணன் நன்றிகூற,நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.புதிய கிளை பணிசிறக்க மாவட்டசங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments: