அருமைத்தோழர்களே!21.01.2014 செவ்வாய் அன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக . . . . .
சிறப்புக் காலமுறை ஊதியத்தை ஒழிக்கப்பட வேண்டும்;சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்; தேர்த லின் போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறு திப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்; சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி,மேலூர் ,திருமங்கலம்,மதுரை ஆகிய 6 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
மதுரை காளவாசல் (மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் எதிரில்) நடைபெற்ற கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் நமது பி.எஸ். என். எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ்,மாவட்டசெயலர் தோழர்.எஸ்.சூரியன் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.போராட்டத்தின் கோரிக்கையை விளக்கியும்,போராட்டம் வெற்றியடைய தோழமை பூர்வமான வாழ்த்துக்களை கூறியும் நமது மாவட்டச்செயலர்,தோழர்.எஸ்.சூரியன் உரையாற்றினார்.
No comments:
Post a Comment