Monday 27 January 2014

முக்கியத்துவம் பெற்ற 3 கிளைகள் மாநாடு . . .







அருமைத்தோழர்களே!அனைவருக்கும் வணக்கம்,கடந்த 25.01.2014 அன்று மாலை திண்டுக்கல்  பழைய தொலைபேசி வளாகத்தில் திண்டுக்கல்(அர்பன்), திண்டுக்கல் (ரூரல்),சின்னாளபட்டி ஆகிய 3 கிளைகளின்இணைந்த மாநாடு தோழர்கள்,கணபதி,ஜெயகிருஷ்ணன்,ராஜன் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.மாநாட்டில் 5 பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டது சிறப்பம் சமாகும். தோழியர்.எஸ்.சுமதி,அஞ்சலியுரை நிகழ்த்தினார். தோழர்கள், ஆரோக்கியம், குருசாமி இருவரும் வரவேற்புரை நிகழ்த்தினர்.
மாவட்டசெயலர் தோழர்.எஸ்.சூரியன்,மாநாட்டினை துவக்கிவைத்து உரையாற்றினார். மாநாட்டினை கீழ்க்கண்ட தோழர்கள் வாழ்த்தி பேசினார்கள்.                                                      
                                                  தோழர். காசிராஜன் 
                                                  தோழர். வைத்திய லிங்கபூபதி 
                                                  தோழர். விஜயரெங்கன் 
                                                  தோழர். உதயசூரியன் 
                                                  தோழர். சந்திரகுமார்  
                                                  தோழர். சின்னையன் 
                                                  தோழர். பரிமள ரெங்கராஜ்
                                                  தோழர். சுப்புராயலு 
                                                  தோழர். நெடுஞ்செழியன் 
                                                  தோழர். கணேசன் 
                                                  தோழர். சிவப்பிரகாசம் 
அதன் பின் நடைபெற்ற ஆய்படு பொருளாக,ஆண்டறிக்கைசமர்,வரவு-செலவு சமர்ப் பிக்கப்பட்டு,விவாதத்திற்கு பின் அவை ஏற்பு வழங்கியது.அதன்பின் புதிய  நிர்வாகி கள் தேர்வை மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் நடத்திவைத்தார்.இறுதியாக மாநில அமைப்புச்செயலர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த் தினார்.
திண்டுக்கல்(அர்பன்),கிளைக்கு,ஞானசுந்தரம்,ஜோதிநாதன்,ஆரோக்கியம் ஆகியோர் முறையே,தலைவர்,செயலர்,பொருளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திண்டுக்கல் (ரூரல்),கிளைக்கு,ஜெயகிருஷ்ணன்,குருசாமி,பிச்சைமணி ஆகியோர் முறையே,தலைவர்,செயலர்,பொருளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சின்னாளபட்டி கிளைக்கு ராஜன்,மலையாண்டி,சவரிமுத்து ஆகியோர் முறையே, தலைவர்,செயலர்,பொருளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இம் மூன்று கிளைகளின் மாநாட்டில் என்ன முக்கியத்துவம் பெறுகிறது என்றால்  ஸ்தல மட்ட மாற்றுசங்க நிர்வாகிகளையும் அழைத்து கருத்துக்களை கேட்பது என்ற நமது சங்கத்தின் நடைமுறை பாராட்டுக்குரியதாகும்.புதிய கிளைச்சங்க நிர்வாகிகளின் பணிசிறக்க மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. 

1 comment:

AYYANARSAMY.R said...

Dear com.
MY sincere wishes for the unanimously elected new BSNLEU office bearers.

R.AYYANARSAMY, BSNLEU DDG
9443309529