Friday 3 January 2014

வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாள்...

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாளான       இன்று அவரது வாரிசுகள் இன்னமும் வறுமையி ல்வாடுகின்றனர்பாஞ்சாலங் குறிச்சியை தலைமை யிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து
அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்ற ஜமீனே இல்லாமல் செய்வதற்காக, அங்கு கள்ளிச்செடிகளையும், எருக்கஞ்செடிகளையும் ஆங்கியேர்கள் நட்டுவைத்தனர். அவர்களது வழித்தோன்றல்களை திருச்சியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகுதான் கட்டபொம்மனின் வாரிசுகள் சொந்த பூமியை பார்த்தனர். 1974ல், தகர்ந்து கிடந்த நிலத்தில் மீண்டும் கோட்டையை எழுப்பினார்.அவரது வாரிசுகளுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன. ஆனால் இன்றைக்கும் கட்டபொம்மனின் வாரிசுகள் வறுமையில்தான் உழல்கின்றனர். கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா என்ற கட்டபொம்முதுரை, தமது பூட்டனார் விட்டுச்சென்ற கோட்டையிலேயே தவம் கிடக்கிறார்., ''கட்டபொம்மன் ஆண்ட கோட்டை சுமார் 36 ஏக்கர். தற்போது சுமார் ஆறு ஏக்கரில்தான் கோட்டையும், சுற்றுலா தலமும் அமைந்துள்ளது. கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதியும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேய தளபதிகளை வீழ்த்தி இங்கேயேசமாதியாக்கியதுபாஞ்சாலங்குறிச்சியில்தான். 1801ல் ஊமைத்துரை படையினரை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயே தளபதிகள் ஜான் கேம்பல், உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அவர்களது கல்லறை இங்கே உள்ளது. இன்றளவும் வரலாற்றின் நினைவுச்சின்னமாகவும், கட்டபொம்மனின் தீரத்தை சொல்வதாகவும் உள்ளது.ஆனால்அந்த கல்லறையையும் சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு பேணிபாதுகாக்கப்படவில்லை. 36 ஏக்கரையும் வேலியிட்டு தொல்லியல்துறை பாதுகாப்பதற்காக, நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எதையும் தொல்லியல் துறை பாதுகாக்கவில்லை. மேலும் கட்டபொம்மன் வாரிசுகள் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லை. எனவே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலேயே வேலைவாய்ப்பளிக்கப்பட்டது. முன்பு 12 பேர் வேலைபார்த்த கோட்டையில் தற்போது நான்குபேர் மட்டுமே உள்ளனர். வேலையாட்கள் நியமிக்கப்படாததால், தோட்டமும், செடிகளும் பராமரிக்கப்படவில்லை. அரசு வழங்கும் பென்சன் 2 ஆயிரம் ரூபாய்தான். 1974ல் அரசு கட்டித்தந்த வீடுகளும் தற்போது வானம் பார்த்து நிற்கின்றன

No comments: