Friday 10 January 2014

செய்தி . . . துளிகள் . . .

கேஸ் சிலிண்டருக்கு ஆதார்: மத்திய அரசை கண்டித்து சி.பி.எம். ஆர்பாட்டம்!
மதுரைகேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு மக்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு மக்களை வஞ்சிக்கிறது எனக்கூறி, மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு சூடம் கொளுத்தி வித்தியாசமான முறையில் போராட்டத்தை நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாதுரை எம்.எல்.., முன்னாள் எம்.எல்.. நன்மாறன், மாவட்ட செயலாளர் விக்கிரமன் ஆகியோர் கலந்து கொண்டு, ‘‘கேஸ் சிலிண்டருக்குகொடுக்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தக்கூடாது, இன்னும் ஏராளமான மக்கள் ஆதார் அட்டை எடுக்காத சூழலில் குறைந்த விலையில் சிலிண்டர் பெற ஆதார் எண் கேட்கக்கூடாது, திடீர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்’’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்
அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் 378 கோடி ரூபாய் நன்கொடை!

புதுடெல்லி: பெரிய நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு 378 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்ததுக்கானசங்கம்தெரிவித்துள்ளது.அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை அளித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் வெளியாகியுள்ளது. 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடையில் 87 சதவீதம், தேசிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது.மொத்த நன்கொடைத் தொகையான 435 கோடி ரூபாயில், 378 கோடி ரூபாயை பெரிய நிறுவனங்கள் அளித்துள்ளன. அதிக நன்கொடை அளித்த நிறுவனங்கள் பட்டியலில், 36 கோடி ரூபாயுடன் ஆதித்ய பிர்லா குழுமம் முதலிடம் பிடித்திருக்கிறது.இந்த ஆய்வின்படி, பா.ஜனதாவுக்கு அதிகபட்சமாக மொத்தம் 192 கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்கள் நன்கொடையாக அளித்திருக்கின்றன. காங்கிரசுக்கு 172 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: