Sunday, 5 January 2014

தோழர்.O.P.குப்தா - ஜனவரி 6 - நினைவு நாள்...

அருமைத் தோழர்களே! இந்திய தொழிலாளர்களின் இயக்கம் ஒரு நீண்ட பின்னணியை கொண்டதாகும்.அவற்றில் சில ..
1851 பம்பாய் பஞ்சாலை தொழிலாளர்கள் அமைப்பு உருவாக்கம்.
1854 கல்கத்தா சணல் ஆலைத் தொழிலாளர்கள் இயக்கம்.
1872 கல்வியறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு இரவு பள்ளி துவக்கம்.
1878 பம்பாயில் "பிரம்ம சமாஜ் " அமைப்பு உருவாக்கம்.
1879 பாக்டரி கமிஷன் என்ற தொழிலாளர் அமைப்பு உருவானது.
1884 இந்திய பாக்டரி சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது.
1895 கல்கத்தா "பட்ஜ்" ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.
1903 சென்னை அச்சக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.
1905 கல்கத்தா அச்சக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.
1907 பம்பாய் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
1908 திலகர் கைது எதிர்த்து ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.
1918 மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்க அமைப்பு.


இத்தகைய வரலாற்று பின்னணியில் தான் தபால்-தந்தி தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்து வந்துள்ளது.சுமார் 105ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தலைமை அஞ்சலகத்தில் சுமார் 100 அஞ்சல் ஊழியர்கள்,அன்றிருந்தே மாகான தலைமை அஞ்சல் அதிகாரியிடம் சம்பள மாற்றம் சமர்பித்தனர்.தபால்-தந்தியில் தொழிற்சங்கத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த மகத்தான தலைவர்கள் பாபுதாரபாத,ஹென்றிபார்ட்டன் ஆகியோராகும்.

ஸ்ரீராம்லால் குப்தா+சோனாதேவி ஆகிய தம்பியருக்கு 08.04.1922-ல் பிறந்தவர்தான் அருமைத்தோழர்.ஓம்பிரகாஷ் குப்தா அவர்கள் தனது கல்வி காலத்தை கர்னல்-லாகூரில் முடித்தார்.தோழர்.O.P.குப்தா அவர்களுக்கு பாதுகாப்புத்துறையில் வேலை கிடைத்தது.ஆனால்,1942-லேயே "டிஸ்மிஸ்"செய்யப்பட்டார்.அதற்க்கு காரணம் அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் உள்ளார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து,போலிஸ் வெரிபிகேசனுக்கு பிறகு எந்த வேலையும் கிடைக்காது என்ற சூழலில் தனது 25 ஆவது வயதில் P&Tசங்க அலுவலக  பணிக்காக AITUC மூலமாக O.P.குப்தா வந்து சேர்ந்தார்.
1946 ஜூலை-11 தபால்காரர்கள் வேலைநிறுத்தம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும் தீயாக பற்றி எரிந்தது.தபால்-தந்தி போராட்டத்திற்கு ஆதரவாகநாடுமுழுவதும் கடைஅடைப்பு, ஆலைகள், பாக்டரிகள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கடைகள் என்று தேசிய இயக்கமாக நடைபெற்ற  இப்போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திர போராட்ட வரலாற்றில் இது ஒரு புது அத்தியாயமாகும்.இப்போராட்டத்தை ஆதரித்து இந்தியாவில் பெருவாரியான மக்கள் பங்குபெறும் பேரணி பம்பாய் - கல்கத்தா - சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்றது.தபால்-தந்தி ஊழியர்கள் அணைவருக்கும் "Good Conduct Pay"(நல்லொழுக்க ஊதியம்)முதன் முறையாக இப்போராட்டத்தின் மூலம் வழங்கப் பட்டது.16 அம்ச கோரிக்கைகளில் 12 அம்ச கோரிக்கைகள் ஏற்கப்பட்டு 06.08.1946 அன்று ஒப்பந்தம் ஏற்ப்பட்டது.தபால்-தந்தி ஊழியர்கள் பல்வேறு பிரிவாக இருந்தவர்களை உள்ளடக்கி 1947-ல் "யூனியன் ஆப் போஸ்டல் அண்டு டெலிகிராப்ஸ் ஒர்க்கர்ஸ்"  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் 23 -க்கும் மேற்ப்பட்ட ஊழியர் சங்கங்கள் இயங்கிவந்தன. 50 சதத்திற்கு மேல் எச்சங்கத்திலும் உறுப்பினர் அல்லாத நிலை இருந்ததால் அணைவரையும் ஒன்றிணைத்து 1954 -நவம்பர் 24-ல் NFPTE என்ற சம்மேளனம் 9 தொழிற் சங்கங்களை  உள்ளடக்கி (தபால்,RMS,டெலிகிராப்ஸ்,எஞ்சினியரிங்,நிர்வாகபிரிவு ) தோழர். V.G.தால்வி, தலை வராகவும், B.N.கோஷ்,பொதுச்செயலராகவும்,பொருளர் பதவிக்கு தோழர்.மக்கன் சிங் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
1957 -ல் 6 அம்ச கோரிக்கை (CPC உட்பட) வலியுறித்தி போராட்டம் அறிவிப்பு - வாபஸ்.
1960 -ஜூலை 11 வரலாறு காணாத வேலைநிறுத்தம் 5 நாட்கள் நீடித்தது.17,789 பேர் கைது,1244 பேர் பதவி நீக்கம்,17500 பேர் தற்காலிக வேலை நீக்கம் ,4,50,000 பேர் சேவை கால முறிவு,5 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியானார்கள்.
1961 ஜூன் 7 -ம் தேதி தோழர்."தாதா கோஷ் " மரணம்.
1968 செப்டம்பர் 19 ஒருநாள் வேலை நிறுத்தம் (9 அம்ச கோரிக்கை ) மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக தொடுத்த அடக்கு முறையை அமுல்படுத்த மறுத்த தோடு,போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக,மத்திய அரசிற்கு கண்டன குரலையும் அன்றைய கேரள முதலமைச்சர் தோழர்.E.M.S.நம்பூதிரிபாட் எழுப்பினார்.அதே தருணத்தில் பாராளு மன்றத்தில் அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளத்தின் அகில இந்திய தலைவராகவும்,பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர்."நாத்பாய்"ஆற்றிய உரை எழுச்சிமிக்கதாக இருந்தது.
1970 காலங்களில் கருத்து வேறுபாடு தொழிற்சங்கத்தில் நிலவியதால்-இரண்டு பிரிவாக செயல்பாடு இருந்தது.- 31.01.1970 - FNPTO வுக்கு மத்தியரசு அங்கீகாரம் வழங்கியது.
1973 ஜனவரி 19 "BONUS FOR ALL DAY" இயக்கம் நடைபெற்றது.
1974 பிப்ரவரி 27 முதல் காலவரைற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு  - இரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் - சிறைவாசம்- உயிர் - உடைமைகள் இழப்பு ஏற்ப்பட்டது. 1974 - டிசம்பர் 11 -ம் தேதி அருமைத்தோழர்.K.G.போஸ் மறைவு
1982 ஜனவரி 19 பொது வேலை நிறுத்தம் -பொதுத்துறைக்கீடான ஊதியம் கோரிக்கை.
1984 செப்டம்பர் 19 தபால்கார்கள் வேலைநிறுத்தம்.
1985 ஜூன் 6-ம் தேதி  R.M.S ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
1986 தபால்-தந்தி துறை இரண்டாக பிரிக்கப்பட்டது .
1990 -1991 போபாலில் நடைபெற்ற அகில இந்திய E-3 மாநாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தோழர்.O.P.குப்தா தோல்வி பெற்றார். தோழர்கள்.மோனிபோஸ்,VAN.நம்பூதிரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
01.10.2000 - ல் நமது டெலிகாம் துறை BSNL என்ற பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.
2002 மார்ச் 22 -ல் விசாகபட்டிணத்தில் BSNLEU சங்கம் உருவாக்கப்பட்டது.CDA சம்பள விகிதத்திலிருந்து IDA சம்பள விகிதம் மாற்றப்பட்டது.BSNL உருவான பின்பு முதல் தடவையாக சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்றது,மொத்தம் 2,95,000 உள்ள வாக்காளர்களில் வெறும் 15000 வாக்குகள் மட்டும் வித்தியாசத்தில் NFTE வெற்றி பெற்றது,ஒரு சங்கம் மட்டும் தான் அங்கீகாரம் என்ற நிலையை O.P.குப்தா எடுத்தார்.
2004 - 2006 காலங்களில் நடைபெற்ற சங்க தேர்தல் உட்பட அணைத்து தேர்தல்களிலும் BSNLEU தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

2007 - தோழர்.O.P.குப்தா சங்கப்பதவியில் இருந்து  ஓய்வு பெற்றார்,இந்த காலகட்டத்தில் அவரது துணைவியார் தோழர்."ஜனக் குப்தா"இயற்கை எய்தினார்.

2013 - ஜனவரி 6 அன்று அருமைத்தோழர்.O.P.குப்தா மறைந்தார். அவர் தான் தங்கி இருந்த "தாதா கோஷ் "பவனிலேயே இறக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெருவித்திருந்தார்,ஆனால் தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்,அவரது மகன்களுடன் குடும்பத்துடன் தங்கவேண்டி வந்ததால் டெல்லி இராணுவ மருத்துவ மனையில் 06.01.2013 அன்று நம்மைவிட்டுபிரிந்தார்.தோழர்.O.P.குப்தா அவர்கள் சாதாரண தோழர்களுடன் பழகுவது,அணுகுவது,எளியமுறையில் வாழ்வது,அனைத்து தோழர்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்த தலைவன்,அதே போன்று தன்னுடைய கருத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் தனது கருத்தை உறுதியாக,தைரியமாக வெளிப்படுத்துவதில் தயங்க மாட்டார்.மாற்று கருத்துக் கொண்ட தலைவர்கள்,தோழர்களிடம் இறுதிவரை உறவை வைத்திருந்தார்.அன்னாரின் நினைவை போற்றுவோம்.நினைவ அஞ்சலியை செலுத்துவோம்.

No comments: