Friday 24 January 2014

இந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி - 24 .

பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடுதான் முன்னேறும்காந்தியடிகள்

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24 ஆம் நாள் தேசிய பெண் ழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதே தினத்தில்தான், 1966ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி அவர்கள் பதவியேற்றார்.

உறுதிமொழி வாசகங்கள்:

* என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன்.

*
என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன்.

*
என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன்.

* எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன்.

*
பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன்.

*
பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன்.

*
பெண்களின் உணர்வுகளை மதிப்பேன்.

*
பெண்மையைப் போற்றுவேன்.

*
மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன்.

*
இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் காப்பேன்.
  பெண் அடிமை தீரும் மட்டும் நம் நாட்டின் பெருமை உயராது - பாரதிதாசன்

No comments: