Monday, 2 May 2016

30-04-16 அலை கடல் எனத்திரண்ட அன்பு நெஞ்சங்கள் .1


30-04-16 அலை கடல் எனத்திரண்ட அன்பு நெஞ்சங்கள் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர் , எஸ். சூரியனுக்கு 30-04-16 அன்று மாலை மாவட்டத் தலைவர் தோழர் சி . செல்வின் சத்தியராஜ் தலைமையில் மதுரை லெவல்-4 வளாகத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கில் பெண்களும் ஆண்களுமாக தோழர்கள் அனைவரும் அலை கடல் எனத்திரண்ட அன்பு நெஞ்சங்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். . .
பாராட்டு விழாவின் துவக்கத்தில் நமது வில்லாபுரம் கிளைச் செயலர் தோழர். கிருபானந்தனின் புதல்வர் "மேஜிக் ஷோ " நடத்தினார். நமது ஆஸ்தான பாடகர் அருமைத் தோழர் . ஷாகுல் ஹமிது அவர்கள் ஒரு சிறப்பான துவக்க படலை பாடினார்.தோழர்.எ. நெடுஞ்செழியன், மாவட்ட உதவிச் செயலர்  வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் சாத்தாவு நிகழ்ச்சிகளை  சிறப்பாக தொகுத்து வழங்கினார். பாராட்டு விழா மலரை நமது அகில இந்திய உதவிச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா அவர்கள் வெளியிட , மாநிலச் செயலர் தோழர்.எ . பாபு ராதா கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். 
 சிறப்பு அழைப்பாளர்களாக, நமது அகில இந்திய  உதவிச்  செயலர் தோழர் எஸ். செல்லப்பா, நமது தமிழ் மாநில செயலர் தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் , நமது மதுரை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் திருமதி.S.E.ராஜம்ITS, சட்டமன்ற உறுப்பினர் தோழர்.ஆர். அண்ணாதுரை, ஆர்.விஜயராஜன், மதுரை மாநகர்  மாவட்ட செயலர் CPI(M), முன்னாள்  SZIEF துணைத் தலைவர் இ .எம். ஜோசப் ஆகியோர்     பாராட்டு உரை நிகழ்த்தி னார்கள்.
AIBSNLEA சங்கம்  சார்பாக மாநிலச் செயலர் தோழர். சிவக்குமார், SNATTA சங்கம்  சார்பாக மாநிலச் செயலர் தோழர். அழகு பாண்டிய ராஜா, TNTCWU சங்கம்  சார்பாக மாநிலச் செயலர் தோழர். வினோத் குமார், WRU சங்கம்  சார்பாக மாநிலச் செயலர்  தோழர் .பாஸ்கரன் ஆகியோரும், BSNLEU மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர்.பி. சந்திர சேகர்,   AIBSNLEA சங்கம் சார்பாக  மாவட்டசெயலர், தோழர்.சீனிவாசன், SNEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர்,தோழர். தெய்வேந்திரன்,  TNTCWU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் .சோனை முத்து , TEPU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்.முருகன், TSOA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  பாலகுமார், SEWA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  கந்தசாமி, AIBSNLOA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  முருகன் AIIEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  ரமேஷ் கண்ணன், TNGEA சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் கிருஷ்ணன், CITU சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர் தெய்வராஜ், MUTA  சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  செந்தாமரை கண்ணன், TANSAC சங்கம் சார்பாக மாவட்டசெயலர், தோழர்  பன்னீர் செல்வம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக தோழர் சாந்தாராம் ஆகியோர் வாழத்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனுக்கு நிர்வாகம் தொடுத்துள்ள பழிவாங்கல் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்யும் முகத்தான், மாவட்ட உதவிச் செயலர் தோழர்.ஆர். ரவிச்சந்திரன் முன்னணித் தோழர்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து, நல நிதியாக ரூ.1,36,000- நமது மாவட்ட செயலர் எஸ். சூரியன் துணைவியார் எஸ். தமிழ் செல்வி வசம் மேடையில் வழங்கினார். தோழர்.எஸ். சூரியன் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர் எஸ். மாயாண்டி  இனிதே விழா நிறைவுற்றது. 

Friday, 29 April 2016

29-04-2016 மதுரை G.M. (O)ல் பணி நிறைவு பாராட்டு விழா...

அருமைத் தோழர்களே ! 29-04-2016 அன்று மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் 16 பேருக்கான  பணி நிறைவு  பாராட்டு விழா G.M. (O)ல் உள்ள மன மகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. 

இம் மாதம் பணி பணி நிறைவு பெறும் அனைவரும் குடும்பத்தாருடன் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.... 

மே தின வரலாறு

“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோஷத்தை முன்வைத்து போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக கடந்த 130 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1856 ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் முதன்முதலில் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்து போராடிய பெருமை ஆஸ்திரேலிய தொழிலாளர்களை சாரும். இதே கோரிக்கைக்காக இரண்டாவது வேலை நிறுத்தம் செய்த பெருமை இந்தியத் தொழிலாளர்களை சாரும். 1862-ல் “8 மணி நேர வேலை” கோரிக்கையை வலியுறுத்தி 1200 ரயில்வே தொழிலாளர்கள் கல்கத்தா நகரிலே வேலை நிறுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து 1863-ல் மும்பையில் நாவிதர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதே ஆண்டு கல்கத்தாவில் பல்லக்கு தூக்குபவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். 1873-ல் கசாப்பு கடைக்காரர்கள் சென்னையில் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்தியாவில் முதன்முறையாக 1923 மே மாதம் 1ஆம் தேதி சென்னை கடற்கரையில் தோழர் சிங்காரவேலு அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டது. தோழர் சிங்காரவேலர் அவருடைய மகளின் சிவப்பு நிறப் புடவையை கிழித்து மே தினக் கொடியை ஏற்றினார்.
1908-ல் இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை எதிர்த்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் 5 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர். போலீசாரின் மற்றும் இராணுவத்தினரின் அடக்குமுறையையும் எதிர்கொண்டு தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். கண்பத் கோவிந்த் என்ற தொழிற்சங்கத் தலைவர் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டார். இப்போராட்டத்தை உற்றுநோக்கிய மாமேதை லெனின், இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்தை மிகவும் பாராட்டினார். இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்தியா வில் தொழிலாளர் நலச் சட்டங்களே ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1926-ல் தான் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. 1947-ல்தான் தொழிற் தகராறு சட்டம் இயற்றப்பட்டது.

Saturday, 16 April 2016

மதுரை SSAயில் மேலும் வெற்றியை உறுதிபடுத்திடSEWA கூட்டணி.

மதுரை  SSA-யில் மேலும், BSNLEU வெற்றியை உறுதிபடுத்திட SEWA கூட்டணி உடன்பாடு 15-04-16 அன்று  ஏற்பட்டுள்ளது என்பதை மிக, மிக மகிழ்வோடு நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கம் அறிவிக்கின்றது.. . .
அருமைத் தோழர்களே ! இதுகாறும் நடந்துள்ள 6 சங்க அங்கீகாரத்  தேர்தலிலும் நம்மோடு கூட்டாக இருந்த SEWA சங்கம், தொடர்ந்து இம்முறையும் நமது மதுரை மாவட்டத்தில் SEWA சங்கம் 7வது சங்க அங்கீகாரத்  தேர்தலிலும்கூட்டாக இணைந்து பணியாற்றி அதிகபட்ச வெற்றியை மதுரை SSAயில் படைத்திட உறுதி பூண்டுள்ளது. 15-04-16 அன்று SEWA மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU + SEWA இரு சங்கங்களுக்கிடையே பேச்சு வாரத்தை நடைபெற்றது. இப் பேச்சுவாரத்தையில், SEWA மாவட்ட செயலர் தோழர்.S. கந்தசாமி, BSNLEU மாவட்டத்தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் தோழர்.S. சூரியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர்.N.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SEWA மாவட்டச் செயலர் தோழர்.S. கந்தசாமி 14-04-16 அன்று நடை பெற்ற  SEWA மாவட்ட செயற்குழு குறித்த தகவல்களை தெரிவித்தார். அதன் அடிப்படையில் மதுரை SSA-யில் SEWA+BSNLEU+SNATTA கூட்டாக 7வது சங்கத் தேர்தலில் பணியாற்றி, மிக அதிகப்படியான வாக்குகளை பெற்று  வெற்றியை பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. அதே போன்று, நமது வெற்றிக்குப் பின் அமைய விருக்கும் LJCM -மில் இணைந்து செயல்படுவது  என்றும், கூட்டாக வாக்கு சேகரிப்பது, நோட்டிஸ், போஸ்டர் கூட்டாக வெளியிடுவது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆகவே, ஸ்தல மட்டத்தில் அனைத்து கிளைகளிலும் நமது கூட்டணி சங்கங்களின் இணைந்த செல்பட்டை உத்தரவாதப் படுத்த வேண்டுகிறோம்.
                                 ---வெற்றி வாழத்துக்களுடன்