மதுரை SSA-யில் மேலும், BSNLEU வெற்றியை உறுதிபடுத்திட SEWA கூட்டணி உடன்பாடு 15-04-16 அன்று ஏற்பட்டுள்ளது என்பதை மிக, மிக மகிழ்வோடு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் அறிவிக்கின்றது.. . .
அருமைத் தோழர்களே ! இதுகாறும் நடந்துள்ள 6 சங்க அங்கீகாரத் தேர்தலிலும் நம்மோடு கூட்டாக இருந்த SEWA சங்கம், தொடர்ந்து இம்முறையும் நமது மதுரை மாவட்டத்தில் SEWA சங்கம் 7வது சங்க அங்கீகாரத் தேர்தலிலும்கூட்டாக இணைந்து பணியாற்றி அதிகபட்ச வெற்றியை மதுரை SSAயில் படைத்திட உறுதி பூண்டுள்ளது. 15-04-16 அன்று SEWA மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU + SEWA இரு சங்கங்களுக்கிடையே பேச்சு வாரத்தை நடைபெற்றது. இப் பேச்சுவாரத்தையில், SEWA மாவட்ட செயலர் தோழர்.S. கந்தசாமி, BSNLEU மாவட்டத்தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் தோழர்.S. சூரியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர்.N.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SEWA மாவட்டச் செயலர் தோழர்.S. கந்தசாமி 14-04-16 அன்று நடை பெற்ற SEWA மாவட்ட செயற்குழு குறித்த தகவல்களை தெரிவித்தார். அதன் அடிப்படையில் மதுரை SSA-யில் SEWA+BSNLEU+SNATTA கூட்டாக 7வது சங்கத் தேர்தலில் பணியாற்றி, மிக அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றியை பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. அதே போன்று, நமது வெற்றிக்குப் பின் அமைய விருக்கும் LJCM -மில் இணைந்து செயல்படுவது என்றும், கூட்டாக வாக்கு சேகரிப்பது, நோட்டிஸ், போஸ்டர் கூட்டாக வெளியிடுவது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆகவே, ஸ்தல மட்டத்தில் அனைத்து கிளைகளிலும் நமது கூட்டணி சங்கங்களின் இணைந்த செல்பட்டை உத்தரவாதப் படுத்த வேண்டுகிறோம்.
---வெற்றி வாழத்துக்களுடன்
No comments:
Post a Comment