Friday, 1 April 2016

செப்.2 அகில இந்திய வேலை நிறுத்தம் - மத்தியத் தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்

தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள 4.04 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களை வசூலிப்பது குறித்தும் கவலைப்படாமல் இருக்கிறது. அதே சமயத்தில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கோ சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது
வரும் செப்டம்பர் 2 அன்றுஅகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெறும் என புதுதில்லி யில் கூடிய மத்தியத் தொழிற்சங்கங் களின் தேசிய சிறப்பு மாநாடு பிரகடனம் செய்துள்ளது.மத்தியத் தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபுள்யுஏ, ஏஐசி சிடியு, யுடியுசி, தொமுச, வங்கி, இன்சூரன்ஸ், பாதுகாப்பு, ரயில்வே,தொலைத்தொடர்பு, அஞ்சல், சாலைப் போக்குவரத்து, மின்சாரம், துறைமுகம் ஆகிய துறைகளில் உள்ள அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சம்மேளனங்கள், மத்திய-மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், அரசின் திட்டப்பணிகளில் பணியாற்றும் அனைத்துஅங்கன்வாடி, மதிய உணவு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இச்சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்.சிறப்பு மாநாட்டை .கே.பத்மநாபன் (சிஐடியு),அமர்ஜித் கவுர்(ஏஐடியுசி), ராஜா ஸ்ரீதர் (எச் எம்எஸ்) உட்பட மத்திய சங்கங் களைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட குழு தலைமையேற்று நடத்தியது. மாநாட்டில் தபன்சென் (சிஐடியு), குருதாஸ் தாஸ் குப்தா (ஏஐடியுசி), சஞ்சீவ ரெட்டி (ஐஎன் டியுசி), ஹர்பஜன் சிங் (எச்எம்எஸ்), சங்கர் சஹா (ஏஐயுடியுசி), சந்தோஷ் ராய், (ஏஐசிசிடியு), அபானி ராய் (யுடியுசி), சுப்பராமன் (தொமுச) முதலானோர் உரையாற்றினார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:சென்ற ஆண்டு செப்டம்பர் 2 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தையும், அடுத்து 2016 மார்ச் 10 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய எதிர்ப்பு தினத்தையும் மாபெரும் அளவில் வெற்றியாக்கிய அனைத்துத் தொழிலாளர்களையும், ஊழியர்களையும் மத்தியத் தொழிற் சங்கங்கள், அகில இந்திய வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சல், மின்சாரம், துறைமுகம் ஆகியவற்றின் சம்மேள னங்கள் மற்றும் மத்திய - மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் வாழ்த்துகிறது, பாராட்டுகிறது.
மோடி அரசின் வெற்று வாக்குறுதிகள்
இந்த அரசு தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகப்பெரிய அளவில் சவாலாக விளங்கக்கூடிய விதத்திலேயே அதன் அணுகுமுறை இருந்து வருகிறது. நாளும் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலை வாசியைக் கட்டுப்படுத்துவதற்கோ, வேலைவாய்ப்பை அளிப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக் காமல், ஊடகங்களில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறது. பொது விநியோக முறையை அனை வருக்குமான ஒன்றாக மாற்றாமல், அதிலிருந்து மேலும் சாமானிய மக்களை விலக்கி வைக்கக்கூடிய செயல்களில் இறங்கி இருக்கிறது.தற்போதைய பட்ஜெட்டில் டீசல் மீது கூடுதல் வரி விதித்திருக் கிறது; நிலக்கரி மீதான தீர்வையை இரட்டிப்பாக்கி இருக்கிறது; ஏழை, நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில் மறைமுக வரியையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
ரூ.4 லட்சம் கோடி வாராக்கடன்
கறுப்புப் பணத்தை வெளிநாடு களிலிருந்து கொண்டுவருவது தொடர்பாக அரசு மவுனம் சாதிக்கிறது. அதேபோன்று தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள 4.04 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்களை வசூலிப்பது குறித்தும் கவலைப்படாமல் இருக்கிறது. அதே சமயத் தில் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கோ சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக நலத் திட்டங்களும் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகி யுள்ளன. ஊழியர் வைப்பு நிதி (.பி.எப்.) மற்றும் இஎஸ்ஐ திட்டங்களைப் படிப்படியாக அழித்துஒழிப்பதற்கான நடவடிக்கை களிலும் அரசு இறங்கி இருக்கிறது.2004ஆம் ஆண்டுக்குப்பின் வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பாதுகாப்பு, ரயில்வே போன்ற துறைகளில் சேர்ந்த ஊழியர்களுக்கும் மிகவும் மோசமான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. முறைசாராத் தொழிலாளர் களுக்கான திட்டங்களும் கூட பெயர்கள் மாற்றப்படுகின்றனவே யொழிய, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடோ, நிர்வாக எந்திரத்தை உருவாக்கமோ இல்லாமல் மக்களைமுட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் சிறுசேமிப்புகளின் மீதும் தற்போது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்
நடப்பில் உள்ள தொழி லாளர் நலச் சட்டங்களை, நடைமுறையில் தொழிலாளர் விரோதசட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது கொண்டு வந்துள்ள சிறிய தொழிற்சாலைகள் (முறைப்படுத்தல் மற்றும் பணி நிலைமைகள்) சட்டமுன்வடிவு அமலாகும்பட்சத்தில் நடை முறையில் உள்ள 14 பெரிய தொழிலாளர் நலச்சட்டங்கள் 40 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும்நிறுவனங்களுக்குப் பொருந்தாது என ஆகிவிடும். இவற்றில் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வது என்பதும் இயலாததாகிவிடும்.சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 144ஆவது கன்வென்ஷனுக்கு எதிரான விதத்தில் இவ்வாறு சட்டமுன்வடிவைக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் நாட்டி லுள்ள உழைக்கும் வர்க்கத்தில் 90 சதவீதத்தினரை தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது.அதேபோன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ரயில்வே, பாதுகாப்புத்துறை மற்றும் நிதித்துறை போன்ற மிகவும் கேந்திரமான துறைகளிலும்கூட அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனு மதி அளிக்கப்பட்டிருக்கிறது. அரசின்திட்டப்பணிகளில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர் களாக்கி நிரந்தர ஊதியம் அளிக்க மறுக்கிறது என்பது மட்டுமல்ல, தற்போது ஒதுக்கிவந்துள்ள பட் ஜெட் ஒதுக்கீட்டைக்கூட மேலும் வெட்டிச் சுருக்கி இருக்கிறது.
குறைந்தபட்ச ஊதியம்ரூ.18 ஆயிரமாக்குக!
இத்தகைய பின்னணியில்தான் இன்றைக்குள்ள விலைவாசிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட வேண் டும். ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக்கப்பட வேண்டும், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, துறைமுகம், தொலைத் தொடர்பு, அஞ்சல், நிலக்கரி, போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் ஜூன், ஜூலை மாதங் களில் மாநில, மாவட்ட, வட்ட அளவிலும், தொழில் பகுதிகளிலும் சிறப்பு மாநாடுகளை நடத்துவது என்றும், அவற்றில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற நாளான ஆகஸ்ட் 9 அன்று தர்ணா/சத்தியாக் கிரகப் போராட்டங்களை மாநிலத் தலைநகர்களிலும், தொழில் மையங் களிலும் நடத்துவது என்றும், செப்டம்பர் 2 அன்று அகில இந்திய வேலைநிறுத்தத்தில் இறங்குவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது

No comments: