Saturday, 2 April 2016

அநீதி களைய ஆர்பரித்த ஆர்பாட்டம் மதுரையில் . . .

அருமைத் தோழர்களே ! NFTE + BSNL நிர்வாகமும் இணைந்து ஊழியர்களுக்கு இழைக்க திட்டமிட்ட போனஸ் அநீதி  களைய நாடு முழுவதும் 01-04-2016 அன்று நாடு முழுவதும் ஆர்பாட்டம்  நடத்திட நமது BSNLEU -CHQ மத்திய சங்கம் அறைகூவல் விடுத்தது. அதன் அடிப்படையில் ஒரு குறுகிய கால அழைப்பில்  மதுரை G.M அலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு ஆர்பரித்த ஆர்பாட்டம், நமது BSNLEU மதுரை   மாவட்டத் தலைவர் தோழர் . சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.. . .  
NFTE + BSNL நிர்வாகமும் இணைந்து போனஸ் வழங்குவதில்  ஊழியர்களுக்கு இழைக்க திட்டமிட்டுள்ள சதியை விளக்கி நமது BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் விளக்க உரை நிகழ்த்தினார்.  TNTCWU மதுரை மாவட்ட செயலர் தோழர் என். சோனை முத்து வாழத்துரை நிகழ்த்தினார், இறுதியாக நமது BSNLEU மதுரை மாவட்ட பொருளர் தோழர். எஸ். மாயாண்டி நன்றியுரை நிகழ்த்தினார்.

No comments: