போனஸ் விவகாரத்தில் நாம் போராட அறிக்கை கொடுத்தவுடன் நிரவாகம் 06-04-2016 அன்று தோழர் அபிமன்யுவிற்கு போராட்டம் தேவையற்றது என்றும், சட்ட விரோதமானது என்றும், நிர்வாகம் எந்த முடிவு எடுக்கவில்லை எனவும், CMDயை குறை கூறுவது அதீதமானது எனவும் கடிதம் கொடுத்தது. அதற்கு நம் பொதுச் செய்லர் இன்று CMD நம் தலைவர்களிடம் பல தடவை 2 இலக்க போனஸ் தான் தரமுடியும் என்று கூறியது உண்மை என்றும், 29-03-2016 அன்று நிர்வாகம் ஒரு பவுண்டுக்கு நிகரான தொகையைதான் போனஸாக தர இயலும் என கூறினார் என்றும், அதனை நாம் ஏற்க முடியாது என்று கூறினோம் என்றும், எனவேதான் நிர்வாகம் CMDன் ஆசியுடன் அவசர அவசரமாக 30-03-2016 அன்று
NFTEயை மட்டும் வைத்து 2 இலக்க போனஸ் தர முடிவு எடுத்துள்ளது என்றும், இதனை பற்றி தான் கூறியது சரிதான் என்றும் அதனை வாபஸ் பெற முடியாது என்றும் கூறி தார்ணா நடக்கும் என்றும் கடிதம் கொடுத்துள்ளார். வேறு வழியின்றி நிர்வாகம் வெள்ளைக் கொடி காட்டி தோழர் அபிமன்யுவை பேச்சு வார்ரத்தைக்கு அழைத்தது. BSNLEU தரப்பில்
தோழர் அபிமன்யு பொதுச் செயலர், தோழர்.R.S.செளஹான் அமைப்புச் செயலர், தோழர்.குல்தீப் சிங் உதவிப்பொருளாளர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் செல்வி.சுஜாதா ராய் DIR(HR), திரு.D.சக்ரவர்த்தி GM(PERS), செல்வி. மதுஅரோரா GM(ESTT), திரு.A.M.குப்தா GM(SR), திரு.ஷியோ சங்கர் பிரசாத் DGM(ESTT), திரு. ராம் ஷக்கல் ADDL GM(SR) ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர். அபிமன்யு ஒருநாள் கால அவகாசத்தில் நம் பொதுச் செயலர் வர முடியாது என தெரிந்தும் நிர்வாகம் PLI கூட்டம் 30-03-2016 நடத்தியதும், CMDன் ஆசிய்டன் நிர்வாகம் 2 இலக்க போனஸ் தொகைக்கு தோழர். இஸ்லாம் அஹமத் NFTE தலைவருடன் ஒப்பந்தம் போட்டதும்தான் பிரச்சனைக்கு காரணம் என்று உறுதியாக கூறினார். DIR(HR) இனி இதுபோல் ஒருபோதும் நடைபெறாது எனவும், போனஸ் பற்றிய முடிவு தேர்தலுக்குப் பின்தான் எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார். நாம் குறைந்தபட்ச போனஸ் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஆயினும் இந்த தார்ணாவிற்குப் பின் தேர்தல் முடியும் வரை எந்த போராட்டமும் நடக்காது என்றும் கூறினோம். ஆனாலும் 08-04-2016 முதல் நிர்வாகத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பை விலக்கி கொள்வதாகவும் அறிவித்தோம். தோழர். அபிமன்யு கொடுத்த கடிதத்தை இணைப்பில் காண்க.. துரோக ஒப்பந்தம் போட்ட NFTE யை புறமுதுகிட்டு ஓடச் செய்வொம்.வெற்றி நமதே...

No comments:
Post a Comment