அருமைத் தோழர்களே ! BSNLலில் பணிபுரியும் அனைவருக்கு ஒரு நியாமான PLI வழங்கப்பட வேன்டு\மென நாம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள சூழலில் , NFTEசங்கம் திடிரென வழக்கம் போல் BSNLநிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து 7வது சங்க அங்கீகார தேர்தல் வேலை மும்பரமாக நடந்து கொண்டிருக்கின்ற இந்த வேலையில், தனது வாடிக்கையான "லோ கொட்டேசன்" பாணியில் "இரு இலக்க" PLIக்கு திட்டம் தீட்டியதை கண்டித்து நமது BSNLEU சங்கம் சார்பாக நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணாவின் ஒரு பகுதியாக, மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் நடைபெற்ற தர்ணாவிற்கு, மாவட்டதலைவர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா தர்ணாவை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் கோரிக்கைய விளக்கி உரை நிகழ்த்தினார். மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள். வி.சுப்புராயலு, பி.தேசிங்கு, எ.வைத்திலிங்கபூபதி, TNTCWU மாவட்ட செயலர் தோழர்.என். சோனைமுத்து ஆகியோர் பேசினர். தர்ணாவை முடித்துவைத்து மாவட்டபொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி உரையாற்றினார். தர்ணாவில் NFTE + BSNL நிர்வாகத்துடன் இணைந்து செய்த கூட்டுசதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அத்தோடு மத்திய சர்கார் சமிபத்தில் அறிவித்துள்ள குறைந்த பட்ச PLI ரூபாய் 7000 BSNLஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இறுதியாக எ. நெடுஞ்செழியன் மாவட்ட உதவிச் செயலர் நன்றி கூற தர்ணா நிறைவுற்றது ...
No comments:
Post a Comment