Wednesday, 6 April 2016

சாமி வரம் கொடுத்தாலும் - பூசாரி வரம் கிடையாதாம்...

07-04-16 கண்டன ஆர்பாட்டம்   .  .  .
அருமைத் தோழர்களே ! 
நமது BSNL-லில் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாத சூழலில், நமது மத்திய சங்க தொடர் முயற்சியால் வங்கிகளில் MOU மூலம் கடன் பெறப்படுகிறது. சமீப காலமாக நமது A.O -Drawal விதிகளுக்கு முரணாக நடந்து கொள்கிறார். விதிகளை பற்றி தனக்கு கவலை இல்லை, DDO-நான் நினைத்தால் தான் கடன் வழங்குவேன் என்ற தனிச்சையான நிலை எடுக்கின்றார். இது குறித்து நாம் BSNLEUஒரு பொறுப்புள்ள சங்கம் என்ற அடிப்படையில், A.O -Drawalஉடன், D/S-AIBSNLEA, D/S-BSNLEU, D/P-BSNLEU, CAO(F) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியாக CAO(F) வழிகாட்டலின் அடிப்படையில் Declaration பெற்றுக் கொண்டு கடன் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டு கடன் கோரிய ஊழியர்களிடம் Declaration-ம் பெற்ராகிவிட்டது. (மார்ச் மாதம் கடன் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு ) ஆனால் அதன்பின்னும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக  A.O -Drawal கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. இது குறித்து நமது DGM(F) உடன் விவாதித்து விட்டோம். நமது G.Mஅவர்களுக்கும் கடிதம் கொடுத்துவிட்டோம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
ஆகவே, 07-04-16 மதியம் 1 மணிக்கு G.M அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டு கிறோம்.

No comments: