அருமைத் தோழர்களே! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், மாவட்டத்தலைவர் தோழர்.சி.செல்வின்சத்தியராஜ் தலைமையில் 11.02.2015புதனன்று,தல்லாகுளம்CSC/TRCயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அறிவிக்கப்பட்டிருந்த ஆய்படுபொருளின் மீது மாவட்டச் செயலர், தோழர்.எஸ். சூரியன் அறிமுக உரையை நிகழ்த்தினார். அதன்பின் மாவட்ட நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் ஆய்படுபொருளின் மீது தங்களது ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்தனர். சீரிய விவாதத் திற்குப் பின் மாவட்டச் செயற்குழு பல்வேறு முடிவுகளை எடுத்தது....
* உடனடியாக மதுரை மாவட்ட போரத்தை கூட்டி அனைத்து சங்கங்களும் இணைந்த, போராட்ட விளக்க சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
* மகளீர் தினம், சங்க அமைப்பு தினம் மற்றும் பகத்சிங் ஆகிய முக்கிய மூன்ரையும் ஒன்றிணைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது.
* தமிழகம் தழுவிய மத நல்லிணக்க மாநில மாநாட்டை மதுரையில், மாநில சங்க ஆலோசனையுடன் சக்தியாக நடத்துவது.
* 17.03.2015 முதல் இந்தியா முழுவதும் நடைபெற உள்ள கலைவரையற்ற வேலைநிறுத்தத்தை மிகவும் வெற்றிகரமாக செய்திட உறுதிமொழி ஏற்றது...
* கையெழுத்து இயக்கத்தை 14.02.2015க்குள் இறுதியாக்கி எல்லாகிளைகளும் மாவட்ட சங்கத்திடம் எதிர்வரும் 14.02.2015க்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
* நமது மாவட்ட உதவி செயலர் தோழர். ஆர். ரவிச்சந்திரன் + மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆர். மதுமிதா திருமணத்தை மனதார வாழ்த்தியது.
* இறுதியாக மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், எஸ். ஜான் போர்ஜியா, பி . சந்திர சேகர் செயற்குழுவை வாழ்த்தி பேசினர்.
மாவட்ட உதவிச் செயலர் தோழர். எ . நெடுஞ்செழியன் நன்றி கூற மாவட்டச் செயற் குழு இனிதே நிறைவுற்றது ..என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
1 comment:
வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment