அருமைத் தோழர்களே ! 12.02.15 வியாழன் அன்று மாலை, BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், FORUM தலைவர் தோழர்.எஸ். சிவகுருநாதன் தலைமையில் மதுரை SSA-யின் FORUMகூட்டம் நடைபெற்றது. . . .
FORUM கன்வீனர் தோழர்.எஸ். சூரியன், கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு, எதிர்வரும் 17.03.2015 முதலான வேலைநிறுத்தத்தை நமது மதுரை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆன பணிகளை அனைத்து சங்கமும் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கருத்தை முன்வைத்தார்.
கூட்டத்தில் SNEA சார்பாக தோழர்கள், கே.தெய்வேந்திரன், எம். சந்திரசேகர், AIBSNLEA சார்பாக தோழர்கள், எம். சிவகுமார், சுப்பிரமணியன், BSNLEU சார்பாக தோழர்கள், எ.நெடுஞ்செழியன், எஸ். பகவத் சிங்கம், ஆர். குருசாமி, எம். முருகேஷ் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விரிவான விவாதத்திற்கு பின் கீழ் கண்ட முடிவகள் எடுக்கப்பட்டது. . . . .
* மாவட்டம் முழுமைக்கும் அனைத்து சங்க பிரதிநிதிகளையும் உள்ளடக்கி கிட்டத்தட்ட 21 ஸ்தலமட்ட FORUM கமிட்டிகள் அமைக்கப்பட்டது.
* பிப்ரவரி -26ம் தேதி வரை அந்தந்த சங்கங்கள் தங்களது கிளைகூட்டங்களை கூட்டி 17.03.2015 முதலான வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட திட்டமிடுவது.
* FORUM முடிவுகளை விளக்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவது.
* நமது நாடு தழுவிய 17.03.15 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளை விளக்கி நோட்டிஸ் ஒன்றை வெளியிடுவது
* பிப்ரவரி -27ம் தேதி FORUM கூட்டத்தை கூட்டி மாவட்ட அளவிலான 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு நடத்துவது.
போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. கிளைச்சங்கங்கள் சிரமேற்கொண்டு ஸ்தலமட்டத்தில் அனைத்து சங்க ஒற்றுமையை கட்டிவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம். ஸ்தலமட்டத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படின் ஸ்தலமட்ட கமிட்டி மூலமாக மாவட்ட மையத்திற்கு, தெரிவிக்க வேண்டுகிறோம்...
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்
No comments:
Post a Comment