தோழர். S.K.வியாஸ் காலமானார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர்.S.K.வியாஸ் மத்தியரசு ஊழியர்களின் ஒரு ஒப்புயர்வற்ற தலைவராகும். அவர் 13.02.2015 அன்று இரவு 08.30 மணிக்கு ஜெய்பூர் மருத்துவ மணையில் காலமானார். அவர் சில நாட்களுக்கு முன்பாக இருதய வலி காரணமாக மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது உடல் நலம் தேறிவந்த அவருக்கு திடிரென உயிர் பிரிந்தது. அவருக்கு தற்போது 85 வயதாகிறது. தோழர். S.K. வியாஸ் 1967 முதல் பல ஆண்டுகள் மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பின்Secretary
General ஆக திறம்பட பணியாற்றிய தலைவராகும். தோழர்.S.K. வியாஸ் அவர்களின் இறுதி சடங்கு ஜோத்பூரில் நடைபெறும். தோழரின் இறப்பு ஈடுகட்ட முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், தோழர்களுக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.தோழர்.S.K. வியாஸ் அவர்களின் மறைவிற்கு நமது செவ்வணக்கம் உரித்தாகட்டும் .
No comments:
Post a Comment