Monday 9 February 2015

முதலில் கியாஸ்.. இப்போ ரேஷன் அரிசி: மூடுவிழா...!

உணவு தானியங்களுக்காக மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தும் மத்திய அரசு முயற்சியின் முதல் நடவடிக்கை புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. அதன் முதல்கட்டமாக, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் 10 கிலோ அரிசிக்கு பதில் இனி 300 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு மானியத்தை மக்கள் நேரடியாக பெற வேண்டும் என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நேரடி மானியத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மானியத்தை பெற ஆதார் அடையாள அட்டை அவசியம் என்றும் அறிவிக்கப் பட்டது. அப்போது, இந்த திட்டத்தை பாஜக கடுமையாக எதிர்த்ததுஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும் நேரடி சமையால் எரிவாயு மானியத் திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த ஜனவரியில் இருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது, இந்த மானியம் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது.இதேபோல் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மண்எண்ணெய் அளவை பாதியாக குறைத்தது. மோடி அரசிடம், தமிழக அரசு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தி வந்தாலும், மண்எண்ணெய் அளவு உயர்ந்தபாடில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.அடுத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான மானியத்தை படிப்படியாக குறைத்து, மக்களுக்கு அரிசிக்கு பதில் பணமாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல் அச்சாரம் போட்டுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 5வது ஆண்டு தொடக்க விழாவில் இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, "ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் 10 கிலோ அரிசிக்கு பதில் இனி 300 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேஷன் கார்டு த்திருப்பவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.மானிய குறைப்பு திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அச்சாரம் போடும் விதமாக புதுச்சேரி முதல்வர் இந்த அதிரடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு:இது குறித்து இல்லத்தரசி  கூறுகையில், இந்தத் திட்டம் நடுத்தர, ஏழை மக்களைக் கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கியில் செலுத்தும் பணம் பெரும்பாலானவர்கள் வீட்டிற்கு போய் சேருவதே இல்லை. இந்தத் திட்டம், அரசாங்கம் தெருவுக்குத் தெரு அனுமதி கொடுத்திருக்கும் மதுபானக் கடைகளின் வருமானத்திற்குதான் பயன்படுமே தவிர ஏழை மக்களுக்குப் பயன்படாது. இதற்கு பதில் 5 கிலோ அரிசியும், பருப்பு வகைகளில் தலா ஒரு கிலோவும் கொடுத்தால் கூட ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.சமூக ஆர்வலர்  தெரிவிக்கையில், "மக்களை ஏமாற்றி அலைக்கழிக்க போட்டிருக்கும் திட்டம்தான் இது. ஏற்கனவே சிகப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கொருமுறை தரும் இலவச வேட்டி- சேலைக்கு பதிலாக ரூ.600 பணம் தரப்படும் என்று அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அதையே இன்னும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஒரு ஊரில் 500 சிகப்பு அட்டைதாரர்கள் இருக்கிறார்கள் என்றால் 50 அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் அங்கன்வாடி மையத்துக்கும், ரேஷன் கடைகளுக்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை இவர்களால் சரியாக செயல்படுத்த முடியும் ? ரேஷன் அரிசியை நிறுத்தி மக்களை நயவஞ்சமாக ஏமாற்றப் பார்க்கிறது இந்த அரசு" என்றார்.​

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
அக்கவுண்டுக்கு வரும் பணம்
டாஸ்ம்ர்க்கிற்கு அல்லவா போய் சேரும்