7-வது ஊதியக்குழுவை அமைக்கக்கோரி மத்திய அரசு ஊழியர்கள் நாடாளுமன்றம் முன்பு ஏப்.28-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் தெரிவித் தார். தூத்துக்குடியில் அவர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷனை உடனே அமைக்கவேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை சேர்த்து வழங்க வேண்டும். புதிய ஓய்வூ தியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.அரசு ஊழியர் இறந்தால் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்குவதில் உள்ளபல விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்ச் 2-ஆம் தேதி, முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து அகில இந்திய அளவில் மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நாடாளுமன்றம் முன்பு ஏப்.28-ஆம் தேதி ஊர்வல மாகச் சென்று நாடாளுமன்றம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாட்டில் இருந்து ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் ஜூலை மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் 12 லட்சம் பேர் கலந்துகொள் கிறார்கள். தமிழ்நாட்டில் மட் டும் 1.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.இதில், வருமான வரித்துறை, தபால்- தந்தி துறை உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு எம்.துரைப்பாண்டியன் தெரிவித்தார். பேட்டியின்போது அரசு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, செய லாளர் வெங்கடேசன் மற்றும் நிர் வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment