Tuesday, 24 February 2015

பாரதிதாசன் பாடல்களை நீக்கக்கூடாது . . .

அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு எழுத்தாளர்கள் வேண்டுகோள்
காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழக பாடத்திட்டத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடலை நீக்கும் முடிவினை முற்றி லும் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத் தியுள்ளது.சிவகங்கையில் தமுஎகச மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் .தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.திருப்பூரில் மார்ச் -19 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறும் தமுஎகச மாநில மாநாட்டிற்கான அறிக்கைகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.தமுஎகச ஒருங்கிணைக்கும் சரிநிகர் அமைப்பின் துவக்க நிகழ்ச்சியை சென்னையில் மார்ச் - 5ம் தேதி நடத்துவது என்றும், சாதியவாதம், மதவாதத்திற்கு எதிராக துவக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்துப் பண் பாட்டுப்படைப்பாளிகள், கலைஞர் களை ஒருங்கிணைப்பது என்றும் முடிவெடுக் கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பாடத்திட்டத்தில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பாடத்தில் `இக் காலஇலக்கியம்எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதை தொகுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தனிநபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் தமிழியக்கம் பாடல்களை நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்துள்ளது. உடனடியாக இவ்விபரம் அறித்த தமுஎகச சிவகங்கை மாவட்டக்குழு, பல்கலைக்கழகத்துடன் பேசி தற் போது, அப்பாடல் நீக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. சமூகசீர்த்திருத்தம், பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த புரட்சிக்கவி பாரதி தாசனின் கவிதைகளில் பரவிக் கிடற்கும் தமிழ்மொழி மீதான பற்றைப் பொறுக்க முடியாத கூட்டத்தின் முயற்சிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இரை யாகக்கூடாது என்று தமுஎகச மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடலை நீக்கும் முடிவினை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கிறதுஇவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா
கூடவே கூடாது
பாரதிதாசன் பாட்ல்கள் தொடரவேண்டும் ஐயா