வனக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவை யிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளி யன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.வனவர் பணியிடங்களில் வனக்கல்லூரி மாணவர் களுக்கு 100 சதவிகித இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் கடந்த 25 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். தற்போது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக தொடரும் இப்போராட்டத்தில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலை யில் வனக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வலியுறுத்தி கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று மதிய உணவு இடைவேளையில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நியாயமானது. எனவே, 25 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் வனக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment