வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வருகின்ற 25 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங் களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்பின்னரும் மார்ச் மாதம் 16 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்று கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் வேலைநிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் இதனால் வங்கியின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம் தடையில்லாத சேவைகளை முடிந்த அளவுக்கு தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் நடைபெறுமானால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் வங்கிகள் செயல்படாமல் இருக்கும் நிலை ஏற்படும். மார்ச் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைநிறுத்தத்தையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது.
வங்கி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிப்புக் குள்ளாகும்என்பதால் வங்கிகள்சங்கமும்,மத்தியநிதித்துறைஅமைச்சகமும் வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புடன் சுமூகமாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணமுன் வரவேண்டும் என BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வலியுறுத்துகிறது...
No comments:
Post a Comment