ஊதிய உயர்வை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும் 25-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.மும்பையில் இந்திய வங்கி களின் உயர் அதிகாரிகள் அமைப்பின் (ஐபிஏ) தலைவர் ராஜீவ் ரிஷி தலைமையில் ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை செவ்வாய்க் கிழமை தோல்வி அடைந்ததை யடுத்து, 4 நாள் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை 12.5 சதவீதத்தி லிருந்து 0.5 சதவீதமாக அதிகரித்து 13 சதவீதமாக அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஊதிய உயர்வு கோரிக்கை விகிதத்தை 23 சதவீதத்திலிருந்து 19 சதவீத அளவுக்குக் குறைத்துக் கொள்வதாக ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் சி.எச்.வெங்கடாசலம்.
No comments:
Post a Comment