மதுரையின் மாபெரும் தியாகிகளில் ஒருவரான தூக்குமேடை பாலுவின் 65ஆம் ஆண்டு நினைவு தினம் பிப்.22-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட் டக்குழு அலுவலகத்தில் உள்ள பாலு சிலைக்கு தலைவர்கள் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்து கின்றனர்.சுரண்டல் வர்க்கத்திற்கு எதிராக மதுரையில் களம் கண்ட கம்யூனிஸ்ட்டுகளில் பாலுவும் ஒருவர். ரிசர்வ்காவல்துறை ஊழியராக பணிபுரிந்து பொது மக்களின், காவல்துறை ஊழியர்களின் நலனுக்காகப் போராடினார். இதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை நகரத்தொழிலாளர் நலனுக்காகப் போராடிய அவர் மீது காவல்துறை பொய் வழக்குத்தொடுத்தது. இதன் விளைவாக பாலுவிற்கு தூக்குத்தண்டனை விதிக் கப்பட்டது. கடந்த 1951ஆம் ஆண்டு பிப். 22ஆம் தேதி மதுரை மத்தியச்சிறையில் தோழர்பாலு தூக்கிலிடப்பட்டார். “செங்கொடி என்றதும் ஜீவன் பிறக்குதம்மா” எனப்பாடல்களைப் பாடியவாறே தூக்குமேடை ஏறிய தோழர் பாலுவின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்து வருகிறது. மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத் தில் உள்ள தூக்குமேடை தியாகி பாலுவின் சிலைக்கு பிப்.22-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தலைவர்கள் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்து கின்றனர்.கட்சியின் மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.விஜயராஜன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, பகுதிக்குழுத் தலைவர்கள் பாலு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment