Thursday 26 February 2015

ரயில்வே பட்ஜெட் : மதுரை- போடி ரயில்பாதை அமையுமா?

மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.மதுரை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை, செங்கோட்டை-விருதுநகர் தடத்தை மின்மயமாக்குவது, கன்னியாகுமரி-நிஜாமுதீன் அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மும்பை-கன்னியாகுமரி ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்,திருநெல்வேலி-சென்னை பகல்நேர ரயில், ஹவுரா-திருச்சி அதிவிரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும், திருநெல்வேலி மார்க்கத்தில் துரந்தோ ரயில் விட வேண்டும்.திருநெல்வேலி-லக்னோ இடையே புதிய வாராந்திர ரயில் இயக்கவேண்டும். திருச்செந்தூர்-திருப்பதி இடையே புதிய வாராந்திர ரயில் இயக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்தில் ஓய்வெடுக்கும் பிலாஸ்பூர் ரயிலை வாராந்திர ரயிலாக இரண்டு நாட்கள் சென்னைக்கு இயக்க வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரையில் இருந்து மும்பைக்கு திருநெல்வேலி வழியாக (கொங்கன் ரயில்பாதை) புதிய ரயில் இயக்க வேண்டும். மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். செங்கோட்டை-சென்னைக்கு புதிய ரயில் விட வேண்டும். செங்கோட்டை-கோவைக்கு இடையே புதிய ரயில் விட வேண்டும். திருநெல்வேலி-கோவைக்கு பழனி,பொள்ளாச்சி,போத்தனூர் வழியாக புதிய ரயில் விட வேண்டும் போன்ற தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மூலம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ரயில்பயணிகளும், பொதுமக்களும் உள்ளனர்.

No comments: