7.2.15 மதுரை மாவட்டம்TNTCWU முழுவதும் கொடியேற்றம்...
அருமைத் தோழர்களே! ஒப்பந்த ஊழியர் சங்கம் முதன் முதலில் , தமிழகத்திலேயே, ஏன் ? இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் நகரில் தான் 07.02.1999-ம் ஆண்டு துவக்கிய பெருமை நம்மைச் சாரும். அவ்வமைப்பு ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு மாநில மாக தனது பாதங்களை பதித்து அகில இந்திய அளவில் கிடத்தட்ட 1 லட்சம் உறுப்பினர்களை கொண்ட வலுவான அமைப்பாக வளர்ந்து 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.இத்தகு பெருமை மிக்க TNTCWU அமைப்பின் 17 வது ஆண்டு துவக்கத்தை 7.2.15 அன்று மதுரை மாவட்டம் முழுவதும் TNTCWU சங்க கொடியேற்றம் நிகழ்ச்சியை BSNLEU+ TNTCWU ஆகிய இரு சங்கங்கள் சார்பாக மிகவும் சிறப்பாககொன்டாடனோம்...மதுரை Leval-4 வளாகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவிற்கு தோழர்
சோனைமுத்து தலைமை தாங்கினார், தோழர்.எஸ். சரவண குமார் சங்க கொடியை ஏற்றிவைத்தார். தோழர் எஸ். சூரியன் சங்க அமைப்புதினம் பற்றியும், நமது இன்றைய கடமைகள் குறித்தும் விரிவாக பேசினார். தோழர்கள். டி. கண்ணன், எம். சிவராமன், ஆர். குருசாமி ஆகிய கிளைச் செயலர்கள் மற்றும் 12 பெண்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். மதுரை EMM பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் தோழர்கள், வி. சுப்புராயலு, என். செல்வம், எஸ், சலீம் பாட்சா, எஸ். வள்ளி ஆகிய நிர்வாகிகள் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். திருநகர் தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், வி. நாராயணன், ஆர். சண்முகவேல், வி. கோபால், கே. வீரபத்திரன், ஆர். சுப்புராஜ், எஸ். மானுவேல் பால்ராஜ், ஆகிய நிர்வாகிகள் உட்பட 22 பேர் கலந்துகொண்டனர். மேலூர் தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், எஸ். ராஜாமணி, எஸ். கண்ணன் ஆகிய நிர்வாகிகள் உட்பட15 பேர் கலந்துகொண்டனர். உசிலை தொலை பேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், எ.அன்பழகன், எம். பரமன், பி . பால்பாண்டி ஆகிய நிர்வாகிகள் உட்பட 15 பேர் கலந்துகொண்டனர். போடி தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், ஆர்.ஹரிகிருஷ்ணன், பி . சந்திரசேகர், எஸ். கண்ணன், எஸ். கனகராஜ் ஆகிய நிர்வாகிகள் உட்பட 14 பேர் கலந்துகொண்டனர். பழனி தொலைபேசியகத்தில் இரு இடங்களில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், கே.பழனிகுமார், என். கருப்பசாமி, பி. கணேசன், எ. சிவப்பிரகாசம், எஸ். கோபால் ஆகிய நிர்வாகிகள் உட்பட 32 பேர் கலந்துகொண்டனர். ஒட்டன்சத்திரம் தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், கே.சுப்பிரமணியன், ஆர்.லெட்சுமணன், பி . பாஸ்கரன் ஆகிய நிர்வாகிகள் உட்பட 12 பேர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள், எஸ். ஜான் போர்ஜியா, எ. வைத்தியலிங்க பூபதி, சக்திவேல், ஆர். சுந்தரி, பி. அற்புத சாமி, ஆகிய நிர்வாகிகள் உட்பட 34 பேர் கலந்துகொண்டனர். வத்தலக்குண்டு தொலைபேசியகத்தில் நடைபெற்ற TNTCWU கொடி யேற்று விழாவில் தோழர்கள்,எ. பிச்சைகண்ணு, சி. ஆண்டிச்சாமி, டி . மூக்கையா ஆகிய நிர்வாகிகள் உட்பட 14 பேர் கலந்துகொண்டனர்.... என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment