Saturday 21 February 2015

உலக தாய்மொழி தினம் - என் தாய்மொழிக்கு என் முதல் முத்தம்

இன்று உலக தாய்மொழி தினம்,எனது தாய்மொழிக்கான மரியாதையை நாம்  இன்றாவது செலுத்தி ஆக வேண்டும் 
...என்றும் என் நாவில் தமிழ் தவிழ வேண்டும்..........என் தாய்மொழி தமிழுக்கு என் முதல் முத்தம்...........
உன்னை காதலிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கிறேன்
காணும் இடமெல்லாம்
உன்னை வாரி அணைத்து
முத்தமிட்டு
மனதுக்குள் படித்து
மகிழ்ந்தாலும்
உன்னை உரத்துப் பேசத்தான் ஆசை எனக்கு. . 

தமிழ் மொழியை கடைசி பாடமாக அரசு கடைபிடித்து வருவதை நிறுத்திக் கொண்டு, அண்டை மாநிலங்களைப் போல், தமிழ்மொழியை முதல் பாடமாக அமைக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும் கடந்த 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை அரசு மொழியாக அறிவிக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் 4 மாணவர்கள் உயிர் நீத்தனர்.  ​இதனை நினைவு கூரும் வகையில் பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக யுனேஸ்கோ அறிவித்தது

No comments: