பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் கார்ப்பரேட்டுகளுக்காக திருடப்பட்ட வழக்கில் ரிலையன்ஸ் ஊழியர்உட்பட 5 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாக தில்லி காவல் துறைத் தலைவர் பாசி தெரிவித்துள்ளார்.புது தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் முக்கிய ரகசிய ஆவணங்கள் கடந்த பிப்ரவரி 17ம்தேதியன்று திருடப்பட்டுள்ளன என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த ஆவணங்களில் எண்ணெய் தோண்டுவதற்கான அரசின் கொள்கை ,பெட்ரோல் விலை நிர்ணயம் மற்றும் எரிவாயு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் மிகவும் ரகசியமாக பராமரிக்கப்படுபவை . இந்த ஆவணங்களை திருடுவது பல காலமாக நடந்து வருவதும் கண்டறியப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த ஆவணங்கள் திருட்டு, `கார்ப்பரேட்டுகளின் சதி’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக தில்லி காவல்துறைத் தலைவர் பாசி பத்திரிகையாளர்களிடம் பேசிய போது கூறியதாவது;
இந்த வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களின் கூட்டாளிகள் கடந்த பிப்ரவரி 17ம்தேதி பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் உள்ள சாஸ்திரி பவனில் நுழைந்து இந்த ஆவணங்களை திருடியுள்ளனர். இவர்களை கையும் களவுமாக பிடிக்க ஒரு திட்டம் வகுத்தோம். அதன்படி சாஸ்திரி பவனுக்கு அருகில் காத்திருந்தோம். இண்டிகோ காரில் வந்த மூன்று பேரில் இருவர் சாஸ்திரி பவனில் இறங்கினார். இரண்டு பேரும் இரண்டு மணிநேரம் கழித்து மறுபடியும் திரும்பிவந்து காரில் ஏறியபோது அவர்களை கைது செய்தோம்.அந்த காரில் சட்டவிரோதமான முறையில் இந்திய அரசு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவர்களிடம் நடத்தியவிசாரணையில் இந்த திருட்டு குறித்த தகவல்கள் கிடைத்தன.சாஸ்திரி பவனின் அலுவலக நேரம் முடிந்த பின்னர் மோசடியான அடையாளம் வைத்தும் அவர்கள் தற்காலிக அனுமதி அட்டைகளை வைத்தும் உள்ளே நுழைவார்களாம்.பின்னர் அங்கிருந்து அமைச்சகத்தின் அலுவலக கதவுகளையும் போலி சாவிகளை வைத்து திறந்து இந்த ரகசிய ஆவணங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். இப்படி திருடப்பட்ட ஆவணங்களை தனியார் எரிசக்தி கலந்தாய்வுக் கம்பெனிக்கு விலைக்கு விற்று விடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த ஆவணங்களை திருடப்பட்ட நிகழ்வில் ரிலையன்ஸ் கம்பெனிஊழியரும் எரிசக்தி ஆலோசகர்களாக தனியார் நிறுவனம் நடத்தி வந்தவர்களும் அடங்குவர். இவர்கள்திருடிய ஆவணங்கள் அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ வருமானால்அந்த சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . கார்ப்பரேட்டுகள் தரும் கையூட்டுக்காக இந்த திருட்டு பல காலமாக நடந்துள்ளது.இவ்வாறு பாசி விவரித்தார்.ரிலையன்ஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட்டுகள் நம் நாட்டின் லாபம்கொழிக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினை மிகக்குறைந்தவிலையிலும் சட்டவிரோதமான முறையிலும் தோண்டிஎடுப்பதற்கு ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு வளங்களை சுரண்டி எடுத்துகொள்ளை லாபம்அடைகின்றன..இவர்களுக்கு எண்ணெய்வளங்களை இருக்கும் இடங்களை திருடப்படும் ரகசிய ஆவணங்களின் மூலம் அறிந்து கொண்டு அதிகசெலவில்லாமல் எடுத்து ஆதாயம்அடைந்துள்ளனர் என்பது தற்போதுவரும் செய்திகளின் மூலம் நிரூபணமாகியுள்ள...
No comments:
Post a Comment